இனி நான் நடிக்க மாட்டேன்.? மனைவி குழந்தைகளுக்காக சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு

sivakarthikeyan
sivakarthikeyan

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் ஆங்கர் ஆக தனது வாழ்க்கையை தொடங்கி படிப்படியாக முன்னடி தற்போது உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார்.

இவர் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் டிப்பர் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் தீபாவளி முன்னிட்டு இன்று வெளியாகி உள்ளது.

மேலும் இந்த திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தையும் பெற்று வருகிறது இந்த நிலையில்  நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் இனிமேல் விளம்பரங்களில் நான் நடிக்க மாட்டேன் என்று உறுதியோடு இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தனது அம்மாவின் பேச்சைக் கேட்டு நடந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது மனைவிக்காகவும் மகளுக்காகவும் ஒரு முடிவை எடுத்துள்ளார். இந்த முடிவு பலரது ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

அதாவது குழந்தைகள் பயன்படுத்தும் போலி பொருட்கள் விளம்பரத்தில் நான் இனிமேல் நடிக்க மாட்டேன் என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறியது அனைவரையும் மெய்சிறிக்க வைத்துள்ளது. அது மட்டுமல்லாமல் இன்னும் அதை கடைபிடித்து வருவது அனைவருக்கும் ஆச்சரியமாக தான் இருந்து வருகிறது.

மேலும் தன் மனைவி மற்றும் குழந்தை பயன்படுத்தாத எந்த ஒரு பொருளையும் நடிகர் சிவகார்த்திகேயன் விளம்பரம் செய்வதில்லை என்பதில் உறுதியோடு இருக்கிறார். அது மட்டுமல்லாமல் இது போன்ற ஒரு கருத்து உடைய திரைப்படத்திலும் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம் கடந்த ஆண்டு வெளியான வேலைக்காரன் என்ற திரைப்படத்தில் குழந்தைகளுக்கு போலியாக செய்யப்படும் உணவுகளை வெளிப்படையாக காட்டி இருப்பார். ஆனால் இந்த படத்தின் கருத்து  ரசிகர்களையும் மக்களையும் பெரிதாக கவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.