சூர்யாவின் தம்பி கார்த்தி தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் இவர் முதலில் பருத்திவீரன் எனும் படத்தில் நடித்து அறிமுகமானார் முதல் படமே வெற்றி படமாக மாறியது அதனைத் தொடர்ந்து சிறப்பு அம்சம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி வருகிறார்.
கார்த்தி அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுக்க ரெடியாக இருக்கிறார் அவரது கையில் விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் ஆகிய மூன்று திரைப்படங்கள் இருக்கின்றன இந்த ஒவ்வொரு படமும் அடுத்தடுத்து வெளிவர உள்ளது. முதலாவதாக முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் விருமன்.
இந்த படம் வருகின்ற 12ஆம் தேதி வெளியாக உள்ளது. அண்மையில் இந்த படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா போன்றவை மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை எதிர வைத்தது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் கார்த்தி விருமன் படத்தின் பிரமோஷனுக்காக தீவிரமாக வேலை செய்து வருகிறார்.
விருமன் படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் சென்டிமென்ட் கலந்த திரைப்படமாக இருக்கும் என தெரிய வருகிறது. இந்த படத்தில் கார்த்தி உடன் கைகோர்த்து அதிதி சங்கர், சூரி, பிரகாஷ்ராஜ், சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், கருணாஸ், அபர்ணா பாலமுரளி ராஜ்குமார், மைனா நந்தினி, வடிவுக்கரசி, மனோஜ், சிங்கம்புலி மற்றும் பல பிரபலங்கள் நடித்து உள்ளனர்.
இந்த படம் நிச்சயம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் கார்த்தி இந்த படத்தின் ப்ரொமோஷனுக்காக மலேசியா சென்று உள்ளார் அங்கு நடுகடலில் பேட்டி கொடுத்து வருகிறார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.