சினிமா உலகில் ஒருவர் ஹீரோவாக இருந்தால் அவரை தொடர்ந்து அவரது குடும்பத்தில் இருப்பவர்களும் அந்த சினிமா உலகில் ஈஸியாக நுழைந்து விடுவார்கள் ஆனால் தனது திறமையை வெளிக்காட்டினால் மட்டுமே அந்த வாரிசு நடிகர் நடிகைகளும் சினிமா உலகில் தன்னை தக்க வைத்துக்கொள்ள முடியும்.
அந்த வகையில் சிவகுமாரின் இரு மகன்கள் ஆன சூர்யா மற்றும் கார்த்தி சினிமா உலகில் நல்ல நல்ல படங்களை கொடுத்து தற்பொழுது முன்னணி நடிகராக வலம் வருகின்றனர். நடிகர் சூர்யா தற்போது தனது 42வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் அதேபோல நடிகர் கார்த்தி விருமன் படத்தின் வெற்றியை..
தொடர்ந்து மணிரத்தினம் 500 கோடி பட்ஜெட்டில் உருவாக்கி உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார். அதன் முதல் பாகம் நாளை கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் கார்த்தி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சூர்யா பேட்டியளித்த பழைய வீடியோ..
ஒன்று இப்பொழுது இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது அதில் நடிகர் சூர்யா தனது தம்பி கார்த்தி குறித்து பேசியும் இருக்கிறார். நடிகர் கார்த்தி அவரது படிப்பிற்காக வெளிநாட்டிற்கு சென்ற பொழுது ஒரு அண்ணனாக சூர்யா எதையும் செய்யவில்லை என ஃபீல் செய்தாராம் அவர் வெளிநாட்டில் கஷ்டப்படுவதை அவரின் அம்மாவின் மூலம் கேள்விப்பட்ட சூர்யா மிகவும் வருத்தப்பட்டாராம்.
அப்பொழுதுதான் கார்த்தி அவரின் அண்ணன் சூர்யாவுக்கு ஒரு மெயில் செய்ததாராம் அதில் சூரியவை பார்த்து தான் இதுவரை அனைத்தையும் செய்து வந்ததாகவும் உனது பாராட்டிற்கு நான் மிகவும் ஏங்கியதாகவும் ஒரு நண்பனாக தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கார்த்தி குறிப்பிட்டிருந்தாராம் இதனால் எப்பொழுதும் அழுகாத சூர்யா அந்த மெயிலை பார்த்தவுடன் கண்கலங்கியதாக தெரிவித்திருக்கிறார்.