தமன்னாவால் நடுத்தெருவுக்கு வர பார்த்த கார்த்தி.! குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை…

tamanna-karthi
tamanna-karthi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை தமன்னா. இவர் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அதன் பிறகு கல்லூரி என்ற திரைப்படத்தில் நடித்து தனக்கென ஒரு அங்கீகாரத்தை பிடித்தார். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களான தனுஷ், சூர்யா, விஜயுடன், ஜோடி போட்டு நடிக்க ஆரம்பித்தார்.

இப்படி முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னாவை பார்த்து பல பிரபலங்கள் வழிந்ததும் உண்டு, அது மட்டுமல்லாமல் ஒரு சில பிரபலங்கள் இவர் மீது காதல் வயப்பட்டு அவர் பின்னாடியே சுற்றியதும் உண்டு. அப்படி அவர் மேல் காதல் வயப்பட்டு அவர் பின்னாடி சுத்தி வந்தவர்களில் ஒருவர்தான் நடிகர் கார்த்தி.

பருத்திவீரன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மாறிய நடிகர் கார்த்தி அதன் பிறகு காதல் கதைகளையும் தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். 2019 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் வெளியான பையா திரைப்படத்தில் நடிகர் கார்த்தி மற்றும் தமன்னா சேர்ந்து நடித்திருப்பார்கள்.

இத்திரைப்படத்தின் போது கார்த்திக் அவர்களுக்கு தமன்னா மீது ஒன்சைடு காதல் ஏற்பட்டு இருக்கிறது இவர்களுடைய இந்த காதலை பத்திரிக்கையில் கூட கிசுகிசுவாக எழுதியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் கார்த்தி அடுத்ததாக சிறுத்தை திரைப்படத்தில் தமன்னா நடித்தால்தான் நான் நடிப்பேன் என்று ஒற்றை காலில் நின்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன் பிறகு சிறுத்தை படத்தில் தமன்னாவும் நடிக்க ஒப்புக்கொண்டார் அதன் பிறகு தான் நடிகர் கார்த்திக் அந்த படத்தில் நடித்தார். இவருடைய இந்த காதலை அறிந்து அவருடைய தந்தை கார்த்தியை தனியாக அழைத்து நான் சொன்னதை உன்னுடைய அண்ணன் சூர்யா தான் கேட்கவில்லை. நீயாவது சொல்வதைக் கேட்டு நடந்துகொள் என்று கார்த்தியிடம் புலம்பி இருக்கிறாராம் அவருடைய தந்தை சிவகுமார்.

தன்னுடைய தந்தை மிகவும் வருத்தமடைந்த காரணத்தால் அவருடைய காதலை தூக்கி தூர எறிந்து விட்டு 2021 ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி ரஞ்சினி என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். இவருடைய திருமணம் முடிந்த ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் தமன்னாவுடன் தோழா திரைப்படத்தில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்திற்கு பிறகு நடிகை தமன்னாவிற்கும் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை அதன் பிறகு தெலுங்கு, ஹிந்தி பக்கம் தாவி விட்டார்.