நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வளம் வருகிறார் இவர் முதலில் பருத்திவீரன் என்ற படத்தில் நடித்து அறிமுகமானார் முதல் படமே வெற்றி படமாக மாறியது மேலும் இவரது திறமை பெரிய அளவில் பேசப்பட்டது அடுத்தடுத்த கதைகள் தொடர்ந்து கிடைத்தாலும் நல்ல கதைகளை சிறப்பாக தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார்.
அந்த வகையில் இவர் நடித்த படங்களான நான் மகான் அல்ல, ஆயிரத்தில் ஒருவன், பையா சிறுத்தை என சொல்லிக் கொண்டே போகலாம் அனைத்து படங்களுமே வெற்றி படங்கள் தான் இப்படி ஓடியதால் இவரது மார்க்கெட் அதிகரித்தது. இப்பொழுது கூட கார்த்தி கையில் மூன்று திரைப்படங்கள் இருக்கின்றன அதில் ஒன்றான விருமன் திரைப்படம்.
கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படம் தொடர்ந்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனத்தை பெறுவதால் மக்கள் கூட்டம் இன்னமும் இந்த படத்தை பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது. மேலும் நல்ல வசூல் வேட்டையும் நடத்தி வருகிறது இரண்டு நாட்கள் மட்டுமே 16 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் கார்த்தி சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் பேசியது சூர்யா படத்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்துள்ளாராம். அது குறித்து விலாவாரியாகவும் அவர் பேசி உள்ளார். vமணிரத்தினம் இயக்கத்தில் சூர்யா மாதவன் மற்றும் சித்தார்த் நடிப்பில் உருவான திரைப்படம் ஆயுத எழுத்து. இந்த படத்தில் முதலில் ஒரு கதாபாத்திரத்தில் கார்த்தியை நடிக்க வைக்கலாம் என பட குழு திட்டமிட்டதாம்.
ஆனால் கார்த்தி அதை நிராகரித்துள்ளார் அவர் சொன்னது இயக்குனர் மணிரத்தினம் தன்னை சந்தித்து ஆயுத எழுத்து படத்தில் நடிப்பதற்காக சொன்னார் ஆனால் எனக்கு அப்பொழுது நடிக்கும் ஆர்வம் இல்லை இயக்குனராக ஆக வேண்டும் என்பது ஆசை என மணிரத்தினத்திடம் சொன்னேன். பின் உதவி இயக்குனராக வைத்துக் கொண்டாராம் கார்த்தியை பின்பு கொடுத்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவில்லை என்பதால் அவருக்கு பதிலாக சித்தார்த்தை நடிக்க வைத்தாராம்.