நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் குறைந்த திரைப் படங்களில் நடித்து இருந்தாலும் அந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மக்களுக்கு பிடித்து போனது மட்டுமல்லாமல் அவரது கேரியரில் பெஸ்ட் படமாகவும் அமைந்தது. சினிமா உலகில் நல்ல படங்களை கொடுத்து முன்னேறிக் கொண்டே செல்கிறார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சுல்தான் படம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. மேலும் வசூலில் ஓரளவுவே அள்ளியது. நடிகர் கார்த்தி அடுத்ததாக பொன்னியின் செல்வன் மற்றும் ஓரிரு திரைப்படங்களை தன் வசம் வைத்துள்ளார். அதனால் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுக்க தற்போது ரெடியாக இருக்கிறார்.
இந்த நிலையில் பல வருடங்களுக்கு முன் கார்த்தி நடிப்பில் பையா திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து அதிரிபுதிரி ஹிட் அடித்தது இந்த திரைப்படத்தை லிங்குசாமி என்பவர் இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு பக்கபலமாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சிறப்பாக இசையமைத்து இருந்தார் இந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் தற்போதும் ரசிகர்களுக்கு பிடித்துப்போன பாடல்களாகவே இருந்து வருகிறது.
இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தமன்னா நடித்து இருந்தார் ஆனால் முதன் முதலில் இந்த ரோலில் நடிக்க இருந்தது தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வரும் நயன்தாரா தான் கமிட்டாகி இருந்தார். படத்தை பற்றி பேசும்போது நயன்தாரா கதை சூப்பராக இருக்கிறது எனக் கூறி படத்தில் கமிட்டானார் ஆனால் அப்போது அவர் நடிக்கிற படங்களுக்கு சம்பளம் குறைவாக வாங்கியிருந்தார்.
பையா திரைப்படத்திற்கும் சம்பளத்தை குறைத்து பேசினார் தயாரிப்பாளர். இதனால் நயன்தாரா இந்த படத்தில் இருந்து சுமூகமாக வெளியேறினார். அதன் பின்னர் தமன்னா இந்த படத்தில் கமிட்டாகி படத்தை நடித்து கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.