கார்த்தி நடிப்பில் வெளியாகிய சிறுத்தை திரைப்படத்தில் நடித்த குட்டி பேபி ரக்ஷனாவா இது எப்படி மடமடன்னு வளர்ந்து விட்டார் பார்த்தீர்களா.

2011 ஆம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் சிறுத்தை, இந்த திரைப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து தமன்னா ,சந்தானம், ராஜீவ் கணகள ஆகியோர்கள் நடித்திருந்தார்கள், பாடத்தை கே இ ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். சிவாவிற்கு இந்த திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்ததால் அவருக்கு சிறுத்தை சிவா என அடைமொழி வைத்து கூப்பிட ஆரம்பித்தார்கள்.

இந்தப் படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்திருப்பார் ஒரு கார்த்திக் பிக்பாக்கெட் திருடனாகவும் மற்றொரு கார்த்தி போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருந்தார்கள், படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார் இந்த திரைப்படம் ஏற்கனவே தெலுங்கில் வெளிவந்த ‘விக்ரமர்குடு’ என்ற திரைப்படத்தின் தழுவல் ஆகும்.

இந்த திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் பேபி ரக்ஷனா இவர் தன்னுடைய ஐந்து வயதில் இந்த திரைப்படத்தில் நடித்தார், சிறுத்தை திரைப்படத்திற்கு பிறகு பேபி ரக்ஷனா ஜெயம்ரவி, சரத்குமார், அமலாபால், துல்கர் சல்மான், விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இவர் நடிப்பில் வெளியாகிய ஓகே கண்மணி, பாண்டியநாடு கடல், திரிஷா இல்லனா நயன்தாரா, நிமிர்ந்து நில் ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விட்டார். இந்நிலையில் இவரின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் படு வேகமாக வைரலாகி வருகிறது.

அழகுப் போட்டி ஒன்றில் கலந்துகொண்ட ரக்ஷனா புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rakshana-tamil360newz

Leave a Comment

Exit mobile version