விருமன் படத்தின் வெற்றியை தொடர்ந்து “புதிய படத்தில்” இணைந்த கார்த்தி – இயக்குனர் யார் தெரியுமா.?

karthi
karthi

நடிகர் கார்த்தி தொடர்ந்து சூப்பரான படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்துள்ளார். இருப்பினும் இவர் கடைசியாக நடித்த சுல்தான் திரைப்படம் பெரிய அளவில் வெற்றியை ருசிக்கவில்லை இதை மாற்றி அமைக்க சிறந்த இயக்குனருடன் கைகோர்த்து  படங்களில் நடித்துள்ளார்.

அந்த வகையில் நடிகர் கார்த்தி கையில் விருமன்,பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்கள் இருக்கின்றன. இதில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவானது விருமன் திரைப்படம் அண்மையில் வெளியாகி வெற்றி நடை கொண்டு வருகிறது. இந்தப் படத்தில் கார்த்தி உடன் கைகோர்த்து சரண்யா பொன்வண்ணன்.

மற்றும் பிரகாஷ்ராஜ், மைனா நந்தினி, சூரி, சிங்கம் புலி மற்றும் பலர் நடித்திருந்தனர் இந்த படம்   திரையரங்குகளில் வெளிவந்து. படம் கலவையான விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக அடித்து நொறுக்கி வருகிறது. இதுவரை மட்டுமே கார்த்தியின் விருமன் திரைப்படம் சுமார் 60 கோடி வசூல் செய்து உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தியின் கையில் பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்கள் இருக்கின்றன இந்த படங்கள் ஒவ்வொன்றும் வெளியேறுகின்றன ஆனால் அவர் புதிதாக ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார் அந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்க இருக்கிறது ராஜு முருகன் அந்த படத்தை  இருக்கிறார். ஆனால் இந்த படத்திற்கு தற்போது பெயர் வைக்கப்படவில்லை இதுவரையிலும் ஏற்காத ஒரு புதிய கதாபாத்திரத்தில் கார்த்தி நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இதற்கான ஒத்திகை மற்றும் பயிற்சிகளில் அவர் ஈடுபட்டு ஒரு நடிகர் கார்த்தி வித்தியாசமான ஒரு கதையை தேர்வு செய்துள்ளாராம். இந்த கதை முழுக்க முழுக்க ஒரு வித்தியாசமான கதை மேலும் கார்த்திக் நடித்துராத ஒரு கதை என சொல்லப்படுகிறது நிச்சயம் இந்த படமும் ரசிகர்களை கவர்ந்து இழுக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது இச்செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது