அண்ணன் சூர்யாவை போல் பல கெட்டப்பில் மிரட்டும் கார்த்தி.! வெளியானது சர்தார் பட டீசர்…

sardar
sardar

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் கார்த்தி இவர் நடிப்பில் வெளியான விருமன் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக ஓரளவு லாபம் பார்த்தது. இந்த படத்தை இயக்குனர் முத்தையா அவர்கள் இயக்கியிருந்தார் மேலும் இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்  அதிதி சங்கர். இவர் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் ஆவார்.

அதனைத் தொடர்ந்து கார்த்தி, விக்ரம், ஜெயம் ராவின் உள்ளிட்ட பலர் நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் கார்த்தி. இந்த படம் இன்று வெளியாகி விமர்சன ரீதியாக அமோக வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி அடையும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் திரைப்படம் வெளிவர காத்திருக்கிறது. இந்த படத்தை பி மித்ரன் அவர்கள் இயக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் ராசி கண்ணா மற்றும் கார்த்தி நடித்துள்ளனர் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பான நடைபெற்றது வருகிறது மேலும் பிரமோஷன் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் சர்தார் படத்தின் வெளியிட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்திக்கின் திரில்லர் மற்றும் ஆக்சன் திரைப்படமாக சர்தார் திரைப்படம் இருப்பது போல் தெரிகிறது.

தற்போது சர்தார் திரைப்படத்தின்  டீசரை கார்த்தியின் அண்ணனான சூர்யா அவர்கள் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த டீசர்ட் தற்போது இணையத்தில் வெளியாகி மிக வைரலாக பரவி வருகிறது.

இதோ சர்தார் பட டீசர்.