தமிழ் திரை உலகில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவர்தான் கார்த்தி. இவர் சமீபத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றி கண்ட திரைப்படம்தான் கைதி திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய வெற்றியை அவருக்குப் பெற்றுத்தந்தது இத்திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக இருந்தாலும் கதைகளம் சிறப்பாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான படமாக அமைந்தது உள்ளது.
இப்படத்தினை தொடர்ந்து தற்போது பொன்னியின் செல்வன் ,சுல்தான் போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் இதை அடுத்து அவர் தனது 22 படத்தை இந்த இயக்குனர் தான் இயக்கப் போகிறார் என அதிரடியாக அறிவிப்பு ஒன்று சமூக வலைதள பக்கம் வெளியாகி வருகிறது. அந்த இயக்குனர் வேறு யாருமல்ல அவர்தான் மித்திரன் 2018 ஆம் ஆண்டு விஷால் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோரை வைத்து வெற்றி கண்ட திரைப்படமான இரும்புதிரை என்ற படத்தை எடுத்தவர்.
என்பது குறிப்பிடத்தக்கது இத்திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது இதனைத் தொடர்ந்து அவர் சிவகார்த்திகேயனை வைத்து ஹீரோ என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் ஆனால் இத்திரைப்படம் டிரைலர் மற்றும் இசை நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் திரையரங்கில் வெளிவந்து படுதோல்வியை சந்தித்தது.
ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் தான் தற்போது கார்த்தியை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார். மித்திரன் கூறிய கதையை கார்த்திக்கு மிகவும் பிடித்து போனதால் தற்பொழுது அவருடன் கைகோர்க்க உள்ளதாக தெரியவருகிறது.இது ரசிகர்கள் மத்தியில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது ஏற்கனவே அவர் தோல்வி படத்தை கொடுத்த நிலை கார்த்திக் அவர்கள் தற்பொழுது தேர்ந்தெடுத்தது உள்ளது.
அதிர்ச்சியை கொடுத்துள்ளது இருப்பினும் அவரது ஆதரவாளர்கள் அவர்கள் எப்போதும் கதையை சிறப்பாக தேர்ந்தெடுக்க கூடியவர் கார்த்தி என்பதால் இப்படம் நிச்சயம் வெற்றி பெறும் ஒரு பக்கம் கூறிவருகின்றனர் இப்படத்தில் அவர் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க வருவதாக தெரியவருகிறது இவர் இதற்கு முன்பு காஷ்மோரா, சிறுத்தை போன்ற பல படங்களில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு சற்று அதிகரித்துள்ளது.
இப்படத்தின் கதை திரில்லர் மற்றும் சமூக குற்றங்களை எடுத்துரைக்கும் படமாக இருக்கும் என தெரியவருகிறது.