Karthi Good Gesture For More Than 500 Days : நடிகர் சிவகுமாரின் மகனும் நடிகர் சூர்யாவின் தம்பி என்ற அடையாளத்தோடு சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது தொடர்ந்து படங்களில் நடித்து முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த சூழலில் கடந்த ஆண்டு கார்த்தி நடிப்பில் அவருடைய 25வது படமாக ஜப்பான் படம் வெளியாகி கலவை விமர்சனத்தை பெற்று படும் தோல்வியை சந்தித்தது. ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான ஜப்பான் படத்திற்க்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது அதேபோல் இசை வெளியீட்டு விழா போன்ற ப்ரோமோஷன் பணிகளும் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் கடைசியில் ஜப்பான் படம் தோல்வியினை சந்தித்ததால் படக் குழுவினர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது.
இந்த சூழலில் சத்தமே இல்லாமல் கார்த்தியின் படம் 500 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறதாம் அது குறித்து பார்க்கலாம். அதாவது அது எந்த திரைப்படம் என்று பார்த்தால் அவருடைய உதவி தானாம். அதாவது நடிகர் கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பாக 100 ரூபாய் மதிப்புள்ள தரமான சுவையான வெஜிடபிள் பிரியாணி ரூ.10 வழங்கி வருகிறாராம்.
சென்னை வளசரம்பாக்கத்தில் உள்ள கார்த்தி மக்கள் மன்றம் தலைமை அலுவலகம் வாசலில் 100க்கும் மேற்பட்ட மக்களுக்கு நாள்தோறும் உணவு வழங்கப்பட்டு வருகிறதாம். ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை இங்கு உணவு வழங்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
படிக்கிற வயதிலேயே கிரிக்கெட் வீரர் மீது ஆசைப்பட்ட பூங்குழலி.. பலருக்கும் தெரியாத தகவல்
லாப நோக்கம் இல்லாமல் மக்களுடைய நலனுக்காகவே இந்த உணவு வழங்கப்பட்டு வருகிறதாம். கடந்த 17ஆம் தேதி இந்த உணவகம் தொடங்கி கிட்டதட்ட 500 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என கூறப்படுகிறது. இவ்வாறு சத்தமே இல்லாமல் தொண்டு செய்யும் கார்த்தியை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.