இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த மாதம் 30 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி லாபத்தை பார்த்து வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படத்தில் வந்தேய தேவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தற்போது புகழ்பெற்ற நடிகராக மாறிவிட்டார் நடிகர் கார்த்தி.
இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக சர்தார் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தை இயக்குனர் பிஎஸ் மித்ரன் அவர்கள் இயக்கியுள்ளார். இந்த படம் இந்த மாதம் 21ஆம் தேதி தீபாவளி முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இதே தினத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள பிரின்ஸ் திரைப்படமும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் கார்த்தி அவர்கள் ஒரு பிரமோஷன் நிகழ்ச்சியில் சர்தார் படம் குறித்து விவரமாக பேசியுள்ளார் அதாவது இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி ஒரு உளவாளியாக நடித்துள்ளார் கிட்டத்தட்ட இரண்டு வருடம் அவருடைய கதாபாத்திரத்திற்காக பல ஆராய்ச்சி வேலை செய்து வருவதாக கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இதனால் இந்த படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் என்றும் கூறியுள்ளார். இந்த திரைப்படம் கொஞ்சம் கூட முகம் சுளிக்க வைக்காத வகையில் மொத்த ரசிகர்களையும் கவரும் என அவர் கூறியுள்ளார். மேலும் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ட்ராவல் செய்யும் எனவும் இந்த திரைப்படத்தில் ராசி கண்ணா ஒரு வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் எனவும் கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் அவர் வயதான தோற்றத்திலும் நடித்துள்ளாராம். இதைப் பற்றி குறிப்பிட்டு பேசிய நடிகர் கார்த்தி அந்த கதாபாத்திரம் மிகப்பெரிய சஸ்பென்ஸ் ஆக இருக்கும் என்று தெரிவித்துள்ளார் இவ்வாறு படத்தின் மொத்த கதையையும் கூறியதால் தற்போது இந்த படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்களாம்.
மேலும் நடிகர் கார்த்தி இதே தினத்தில் வெளியாக உள்ள சிவகார்த்திகேயன் பிரிண்ட்ஸ் திரைப்படத்திற்காகவும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் ஆனால் இது வாழ்த்துவது போன்று தெரியவில்லை சவால்விடும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த இரண்டு திரைப்படமும் நேரடியாக மோத இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ள நிலையில் தற்போது கார்த்திக் சிவகார்த்திகேயனை சவால் விட்டு அழைப்பதாக அவர் பேசியது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.