தமிழ் சினிமாவில் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவர் கார்த்தி இவர் தற்பொழுது சுல்தான் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது அனைவர்க்கும் தெரியும் சுல்தான் திரைப்படம் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது, இந்த நிலையில் கார்த்தி இந்த இரண்டு திரைப்படத்திற்கு பிறகு யாருடன் இணையபோகிறார் யார் இயக்குனர் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்தது.
அந்த வகையில் அடுத்ததாக இரும்புத்திரை மற்றும் ஹீரோ திரைப்படங்களை இயக்கிய பிஎஸ் மித்ரன் அவர்கள் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் தான் இசையமைக்க இருக்கிறார், கார்த்தியுடன் மித்ரன், ஜிவி பிரகாஷ் இணையும் புதிய திரைப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ் லட்சுமணன் தயாரிக்க இருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் நடிகர் மற்றும் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரையும் விரைவில் படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.