நடித்தது வெறும் 10 படம் தான் கோடிகோடியாக பணத்தை குவிக்கும் கார்த்தி பட நடிகை.! அதுவும் வெறும் 24 வயதிலேயே..

karthik

சினிமாவில் முன்பெல்லாம் இயக்குனர்கள்,தயாரிப்பாளர்களை தேடி தேடி போய் நடிகைகள் பட வாய்ப்புகளை கேட்பார்கள். எனவே அவர்கள் சொல்லும் சம்பளத்திற்கு தான் அந்த நடிகைகள் நடிப்பார்கள்.

ஆனால் தற்போது அதற்கு தலைகீழாக மாறி இயக்குனர்கள்,தயாரிப்பாளர்கள் நடிகைகளை தேடிப்போய் நடிக்க சொல்வதால் சம்பளங்களை டபுள் மடங்காக கேட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் இளம் நடிகை ஒருவர் தனது 24 வயதில் பத்து படங்களில் நடித்து சொத்துக்களை குவித்து வருகிறார். அந்தவகையில் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. இவர் கன்னட நடிகை ஆவார்.

இவர் தமிழில் எந்த படமும் நடித்ததில்லை ஆனால் சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருவதால் தமிழ் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்துள்ளார்.  தற்போது தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகளுக்கு எவ்வளவு வரவேற்பு உள்ளது அதே போலவே ரஷ்மிகா மந்தனாவுக்கும் உள்ளது.

தற்பொழுது இவர் இந்தியில் நடிகர் சித்தார்த் மல்கோத்ராவுடன் மிஷன் பஞ்ச் என்ற படத்திலும், அமிதாப் பச்சனுடன் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இவ்வாறு படிப்படியாக உயர்ந்து தற்போது தனது சம்பளத்தை 2 கோடியாக உயர்த்தி உள்ளாராம். ரஷ்மிகா மந்தனாவுக்கு மும்பையில் ஒரு சொந்தவீடு, ஹைதராபாத்திலும் பல கோடி மதிப்புள்ள வீடு வைத்துள்ளாராம் அதோடு கர்நாடகாவிலும் பல சொத்துக்களை வாங்கி உள்ளாராம்.

rashmika
rashmika

இதனைத் தொடர்ந்து தற்போது இவர் கார்த்திக்குடன் இணைந்து சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். அதோடு தளபதி விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 65 படத்திலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதனைத் தொடர்ந்து தற்போது சென்னையிலும்  கோடி மதிப்பில் வீடு வாங்கலாம் என்று  திட்டமிட்டுள்ளாராம். இவரைப் பார்த்து பல நடிகைகள் பொறாமையில் 24 வயதிலேயே இவ்வளவு சொத்தா என்று  கூறி வருகிறார்கள்.