தனுஷ் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி நடைபோட்டு வரும் திரைப்படம் கர்ணன். இத்திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களிலேயே 1.43 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. போகப்போக பல கோடி வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இத்திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இத்திரைப்படம் உருவானது. அதோடு முதலில் தனுஷ் அசுரன் திரைப்படத்தில் நடித்து அத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
அசுரன் திரைப்படத்தையும் தாணு தான் தயாரித்திருந்தார். எனவே தனது இரண்டாவது படத்திலும் தனுசுக்கு வாய்ப்பு கொடுத்தார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும் கலவை விமர்சனத்தை பெற்று வருகிறது.
பலர் தெலுங்கு சினிமாவில் இருந்து சில காட்சிகள் காப்பி அடிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறார்கள். ஆனால் கர்ணன் திரைப்படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இயக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்ணன் திரைப்படத்தில் நடித்து இருந்த ஒரு சில கதாபாத்திரங்கள் ரசிகர்களால் பாராட்டப்படுகிறது.
அந்தவகையில் மலையாள நடிகர் லால் கேரக்டர் பலரையும் கவர்ந்துள்ளது. இவர் கர்ணன் திரைப்படத்தில் தனுஷுக்கு தாதாவாக நடித்திருந்தார். இது ஒருபுறமிருக்க தற்பொழுது வில்லன் கேரக்டரில் நடித்த நடிகர் ஒருவர் என்னை திட்டாதீங்க என்று மிகவும் வருத்தப்பட்டு வருகிறார்.
அந்த வகையில் மிகவும் ஈவிரக்கம் இல்லாமல் மிகவும் கொடூர வில்லனாக நடித்து இருந்தவர் நடராஜா சுப்பிரமணி . இவர் மிகவும் ஈவு இரக்கமில்லாத கொடூர வில்லனாக நடித்துள்ளதால் ரசிகர்கள் இவரை தொடர்ந்து திட்டி வருகிறார்கள். எனவே தற்பொழுது நடராஜா சுப்பிரமணி தனது டுவிட்டரில் என்ன திட்டாதீங்க எப்பபோவ்.. அத்தோவ் .. அண்ணோவ்.. கண்ணபிரானா நடிச்சி தான்பா இருக்கேன்.. போன் மெசேஜ் இல்ல திட்டாதீங்க பா முடியலப்பா.. அது வெறும் நடிப்பு.. ரசிகர்களுக்கு எனது நன்றி. என்ற ட்விட்டை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
நடராஜா இதற்கு முன்பே மிளகா,சதுரங்க வேட்டை,முத்துக்கு முத்தாக போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்த ஒருவர்.