தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர்களில் நடிகர் தனுஷும் ஒருவர் இவர் ஆரம்பத்தில் மிக மோசமான விமர்சனங்கள் உடைய திரைப்படத்தில் நடித்து இருந்தாலும் தற்போது மெகாஹிட் திரைப்படங்களில் நடித்து மாஸ் காட்டியிருக்கிறார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகர் செல்வராகவனின் தம்பி என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இவர் தான் முதல் முதலில் இவரை சினிமாவில் நுழைத்து விட்டவர் ஆவார். இந்நிலையில் தற்போது மாரி செல்வராஜ் உடன் நடிகர் தனுஷ் கர்ணன் திரைப்படத்தில் நடித்துள்ளார் இத்திரைப்படம் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்த நிலையில் தற்போது ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இத்திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளதாக செய்திகள் வெளிவந்து ரசிகர் மத்தியில் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மாரிசெல்வராஜ் பரியேறும் பெருமாள் என்னும் திரைப்படத்தில் தன்னுடைய திறனை காட்டி உள்ளார்.
ஏனெனில் அது திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி மன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது இந்நிலையில் கர்ணன் திரைப்படத்தின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் அசுரன் திரைப்படத்தை போல கர்ணன் திரைப்படமும் மெகா ஹிட் அடிக்கும் என தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
சமீபத்தில் நடிகர் தனுஷ் மாசான கதாபாத்திரத்தில் நடிப்பதை விட கதையம்சமுள்ள கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இதன் காரணமாக கர்ணன் திரைப்படத்தில் உள்ள சில காட்சிகளை பார்த்த பல்வேறு பிரபலங்களும் இந்த திரைப்படத்தை புகழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் திருடா திருடி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சுப்பிரமணியன் இந்த திரைப்படத்தின் டீசரை பார்த்து விட்டு டீசர் வேற லெவல் என கமெண்ட் செய்துள்ளாராம். அதுமட்டுமில்லாமல் கர்ணன் எல்லோருடைய மனதையும் ஒழுகாமல் விடமாட்டான் போல தெரிகிறது என கூறியுள்ளாராம் இவர் வெளியிட்ட அந்த பதிவானது சமூக வலைத்தளத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.