கர்ணன் திரைப்படத்தில் இதை எதையும் செய்யவில்லை விளக்கம் கொடுத்த பிரபல நடிகர்.!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டிப் பறந்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபகாலமாக இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தையும் நல்ல கதை உள்ள ரசிகர்களை கவரும் வகையிலும் சமூகத்துக்கு தேவையான நல்ல கருத்துக்களை மையமாக வைத்து இருக்கும் பல படங்களில் தேர்ந்தெடுத்து  நடித்து வருகிறார்.

அந்தவகையில் அசுரன், பட்டாசு போன்ற திரைப்படங்களை தொடர்ந்து சமீபத்தில் மாரிசெல்வராஜ் கூட்டணியில் கர்ணன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. அதோடு பல பிரபலங்கள் தனுஷ் மற்றும் மாரிசெல்வராஜ் நேரில் சந்தித்து தங்களது பாராட்டுக்களை கூறியிருந்தார்கள்.

இத்திரைப்படத்திற்கு பிறகு தனுஷ் வேற லெவல் ஹீரோவாக மாறி விட்டார் என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் இத்திரைப்படத்தை தொடர்ந்து இவர் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு தேவையான படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் தற்போது இவர் நடிப்பில் தமிழில் ஜகமே தந்திரம் திரைப்படம் வெளியாக உள்ளது.

இதனைத் தொடர்ந்து D 43, அந்த ராங்கி ரே, ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் உடன் இணைந்து ஒரு திரைப்படம் செல்வராகவன், வெற்றிமாறன் இயக்க உள்ள நானே வருவேன், இயக்குனர் வெற்றிமாறனுடன் ஒரு திரைப்படம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் D44 மற்றும் ஹோலிவுட்டில் த கிரே மேன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்து தனுஷ் சினிமா உலகில் கலக்கி வருகிறார்.

இந்நிலையில் கர்ணன் திரைப்படத்தைப் பற்றி சூப்பர் அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது. இத்திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ராஜீஷா விஜயன் நடித்திருந்தார்.இவரைத் தொடர்ந்து யோகிபாபு,கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இத்திரைப்படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இவர்களைத் தொடர்ந்து இத்திரைப்படத்தில் எமன் என்ற கேரக்டரில் நடித்து இருந்தவர் தான் நடிகர் லால் இவரும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இவரின் கேரக்டரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

ஆனால் ரசிகர்களின் நீங்கள் ஏன் டப்பிங் பேச வில்லை என்று லாலை நீண்ட காலங்களாக கேட்டு வந்தார்கள். அதற்கு பதிலளிக்கும் வகையில் தற்பொழுது லால் நான் டப்பிங் பேசியிருந்தால் இத்திரைப்படத்தின் இயல்பாக இருக்காது நான் நடித்துள்ள கதாபாத்திரம் மட்டும் தனியாக தெரிந்திருக்கும் எனவே தான் நான் டப்பிங் பேச வில்லை என்று கூறிவுள்ளார்.