வெள்ளித்திரையில் மிக சிறந்த நடிகராக ரசிகர்கள் கொண்டாடும் வகையில் பிரபலமாகி வரும் நடிகர் தான் தனுஷ் இவர் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் புதிய புதிய கதை அம்சங்களை கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் உச்ச நட்சத்திரமாக விலங்கிவிட்டார். அசுரன் திரைப்படத்திற்காக இவர் பல விருதுகளை வென்றார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.அதேபோல் இவரது நடிப்பில் வெளியாகும் பல திரைப்படங்களையும் இவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.
இவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி வெளியிடப்பட்டது வெளிவந்த முதல் நாளிலேயே அதிக பார்வையாளர்களை பார்க்க வைத்து வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்ததாக கூறப்பட்டது.
இந்த திரைப்படத்தை பற்றி தான் தற்பொழுது ஒரு தகவல் மிக வேகமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது ஆம் அந்த தகவல் என்னவென்று கேட்டால் ஜெர்மனி நாட்டில் பிராங்க்பர்ட் நகரில் வருகிற அக்டோபர் மாதம் 12,13,14 தேதிகளில் நடக்க இருக்கும் New Generation Independent Indian Film Festive விழாவில் இந்த திரைப்படம் திரையிட படுவதாக இந்த தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
இந்த தகவல் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் இதனை தான் பல சினிமா பிரபலங்களும் கூறிவருகிறார்கள் தனுஷ் நடிப்பில் தற்பொழுது அந்த ராங்கி ரே,மாறன் போன்ற பல திரைப்படங்கள் உருவாகி வருவதால் இந்த திரைப்படங்களை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது.ஏனென்றால் இந்த திரைப்படங்கள் வெளியானால் தனுஷ் அவர்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துவிடும் என்பது தான்.