மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம்தான் பரியேறும் பெருமாள் இந்த திரைப்படம்ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றதால் அடுத்ததாக தேசிய விருது பெற்ற கதாநாயகன் தனுஷ் நடிப்பில் வெளியாகிய கர்ணன் திரைப்படத்தை இயக்கினார். கர்ணன் திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகியது இந்த திரைப்படத்தில் ரஜிஷா விஜயன், யோகி பாபு, லக்ஷ்மி பிரியா, கௌரி கிஷன் நட்டி என பலர் நடித்திருந்தார்கள்.
இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிபெற்றது. இந்த திரைப்படத்தில் பண்டாரத்தை பாடல் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதனால் பாடல் வரிகள் சில மாற்றங்களை செய்தார் மாரிசெல்வராஜ். பல சர்ச்சைகளை சந்தித்தாலும் தற்போது ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
1995 இல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியங்குளம் என்ற கிராமத்தில் காவல்துறை கடுமையான தாக்குதல் ஒன்றை நடத்தியது அதில் பலர் கொல்லப்பட்டார்கள் பல கிராமங்கள் சூறையாடப்பட்டது தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்தார்கள் இதன் பின்னணியில் மையமாக வைத்து கர்ணன் திரைப்படம் உருவாகி இருந்தது.
வழக்கம்போல் தனுஷ் தன்னுடைய மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். வெறும் 50 சதவிகித திரையரங்கை இருக்கைகளுடன் வெளியாகிய இந்த திரைப்படம் மூன்றே நாட்களில் 25 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. தனுஷ் திரைப்பயணத்தில் மிகப்பெரிய ஓப்பனிங் திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்துவிட்டது.
மேலும் கர்ணன் திரைப்படத்தை பார்த்த பல பிரபலங்கள் தங்களின் பாராட்டை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வந்தார்கள். தனுஷ் இந்த திரைப்படத்தில் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்த இதுபோல் தனுஷுக்கு இணையாக லால் நடராஜன், யோகிபாபு என அனைவரும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் கைதட்டலை பெற்றார்கள்.
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் பல காட்சிகளில் குதிரையுடன் வளம் அந்த பையனை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது அவர் தான் கிளைமாக்ஸ் காட்சியில் தனுஷை அழைத்து வருவார். இவருக்கு உண்மையிலேயே குதிரை ஓட்டத் தெரியுமாம் இவருடைய பெயர் காளி இவர் சத்யா சீரியலில் விஷ்ணுவுடன் நடித்துள்ளார் இதோ அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.