அரங்கமே அதிரும் வகையில் மரண குத்து டான்ஸ் போட்ட தனுஷின் கர்ணன் பட இயக்குனர்.! ஓரமாய் நின்று உறைந்து போய் பார்க்கும் சாண்டி மாஸ்டர்.!

karnan
karnan

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்களின் வரத்து அதிகரித்துக் கொண்டே போகிறது அதேபோல் இளம் இயக்குனர்கள் தங்களுடைய திறமையால் ஹிட் திரைப்படங்கள் கொடுத்து வருகிறார்கள்.  அந்த வகையில் தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் மாரி செல்வராஜ்.

இவர் தன்னுடைய ஆரம்ப காலத்தில் சினிமாவில் நடிகனாக மட்டும் தான் தனது வாழ்க்கையை தொடங்கினார். அதன் பிறகு தன்னுடைய ஆசை இயக்குனராக ஆகவேண்டும் என்பதை நிறைவேற்றுவதற்காக இயக்குனர் ராம் அவர்களுடம் கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர்.

பிறகுதான் தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தை இயக்கி  தன்னுடைய எதார்த்த கதையினால் மக்களை வியந்து பார்க்க வைத்தார். அதேபோல் பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்காக பல விருதுகளை தட்டிச் சென்றார் மாரிசெல்வராஜ்.

இந்த நிலையில் தற்போது மாரிசெல்வராஜ் தனுஷ் அவர்களை வைத்து கர்ணன் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகிய தாறுமாறாக வைரலாகி வருகிறது அதுமட்டுமில்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

karnan director
karnan director

இந்தநிலையில் மாரி செல்வராஜ் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் மரண குத்து குத்தும் நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்து பல ரசிகர்கள் வாயடைத்துப் போகிறார்கள். விஜய் தொலைக்காட்சியில் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் மாரிசெல்வராஜ். அப்பொழுது அவர் துணை இயக்குனராக தான் பணியாற்றி வந்தார்.

அந்த காலகட்டத்தில் செம குத்தாட்டம் போட்டு அரங்கத்தையே அதிர வைத்துள்ளார் இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.