நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் இவர் நடிப்பில் வெளியாகிய திரைப்படங்கள் சமீபகாலமாக வெற்றி பெற்று வருகின்றன. அந்த வகையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் கர்ணன்.
தற்பொழுது எங்கு திரும்பினாலும் கர்ணனின் பேச்சு தான் அதிகமாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அசுரன் திரைப்படத்தையே ஓரம் கட்டும் அளவிற்கு கர்ணன் திரைப்படம் அமைந்துள்ளதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இருந்தாலும் இந்த காலகட்டத்தில் 50 சதவிகித பார்வையாளர்களை மட்டுமே பார்க்கும்படி திரையரங்குகள் அமைந்திருந்தாலும் கூட்டம் மட்டும் குறைந்தபாடில்லை.
சொல்லப்போனால் திரையங்கில் இப்பொழுது கூட்டம் களை கட்டி வருகிறது. முதலில் கொரோனா காலகட்டத்தில் கர்ணன் திரைப்படம் வெளியானாள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் என அரசல்புரசலாக செய்திகள் வெளியானது. ஆனால் கர்ணன் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே 65 கோடி வரை லாபம் பெற்றுவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் கர்ணன் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் 21 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளதாக கூறுகின்றார்கள் தனுஷ் கேரியரில் திரைப்படம் திரைக்கு வந்து பிறகு டிஜிட்டல் தளத்திற்கு பெரிய விலைக்கு போன திரைப்படமாக கர்ணன் திரைப்படம் அமைந்துள்ளது.
அதேபோல் தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் ஜகமே தந்திரம் திரைப்படமும் 60 கோடிக்கும் மேல் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது அதனால் ஜகமே தந்திரம் திரைப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் இணையதளத்தில் வெளியாகும் என தெரிகிறது அசுரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் அதேபோல் கர்ணன் திரைப்படமும் 100 கோடிக்கு மேல் வசூல் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபகாலமாக மாஸ் நடிகர்களின் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் இந்த நிலையில் தனுஷின் திரைப்படமும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூலை ஈட்டி வருகிறது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.