காந்தாரா 2 ரெடி விரைவில் தொடக்கம்.! ஆனால் ஒரு ட்விஸ்ட் இருக்கு…

kantara
kantara

கன்னட சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் ரிஷப் செட்டி இவர் இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், என்று பல மொழிகளில் வெளியானது.

இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படம் 1990களில் நடந்த வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது தான் இந்த காந்தாரா திரைப்படம். இந்த காந்தாரா திரைப்படம் வெளியான பிறகு தான் 60 வயது கடந்த பூதா கோலா நாட்டிய கலைஞர்களுக்கு மாதம் 2000 ஓய்வூதியம் கொடுக்க வேண்டும் என்று கர்நாடகா அரசு அறிவித்தது அந்த அளவிற்கு இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருந்தது அதுமட்டும் இல்லாமல் தமிழ் ரசிகர்களையும் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் கவர்ந்தது.

முதல் பாகம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து இரண்டாவது பாகம் இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்க உள்ளதாக தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சி தான் இரண்டாவது பாகம் அமைந்து இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த கதை அந்த கடவுள் எப்படி உருவானார் அந்த மன்னருக்கு என்ன ஆனது என்று எடுத்துரைக்கும் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் இந்த படம் உருவாகி ஏப்ரல் மாதத்திற்குள் முடிவடைந்து ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. முதல் பாகம் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது பாகத்தை பற்றி யாரும் யோசிக்காத நிலையில் தற்போது இரண்டாவது பாகம் உருவாக நேரடியாக இருக்கிறதாம் அது மட்டுமல்லாமல் இந்த கதையை இயக்குனரும் நடிகருமான ரிஷப் செட்டி உருவாக்கி விட்டாராம் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.