கான்பூரில் காவல் துறை ஐஜி அதிகாரி ஒருவர் பொது இடத்தில் மாஸ்க் அணியாததால் அபராத தொகையாக ரூபாய் நூறு செலுத்தி அங்கு இருப்பவர்களை அசர அடித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பதிப்பு மிக வேகமாக பரவி வருகிறது, இதனை கட்டுப்படுத்துவதற்காக சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது, அதுமட்டுமில்லாமல் வெளியே வரும்பொழுதே கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அப்படி மீறியும் முக கவசம் அணியாமல் வெளியே வந்தால் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது, இந்தநிலையில் உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் காவல்துறை ஐஜி அத்திரி மோகித் அவர்கள் முக கவசம் அணியாமல் வந்ததால் 100 ரூபாய் அபராதம் செலுத்தியுள்ளார். மேலும் ஐஜி அதிகாரி நான் மாஸ்க் போடாமல் வெளியே வந்து விட்டதாகவும் அதனால் அவரே அதிகாரிகளிடம் அபராதம் விதிக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளார்..
இதுபற்றி அவர் கூறுகையில் நான் பாரா பகுதிக்கு கண்காணிப்பு பணிக்காக சென்றிருந்தபோது மாஸ்க் அணியாமல் காரைவிட்டு இறங்கி விட்டேன் அதன்பிறகு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து கொண்டிருக்கும் போத எனக்கு நினைவுக்கு வந்தது மாஸ்க் அணிய வில்லை என்று, பிறகு உடனடியாக மார்க் எடுத்து அணிந்தேன்.
இருந்தாலும் மக்கள் அனைவரும் அபராத தொகையை செலுத்தும் பொழுது நான் மட்டும் செலுத்தாமல் இருந்தால் அது தவறு அதனால் அதிகாரிகளிடம் அபதாரம் செலுத்தினேன் என கூறியுள்ளார், இதன் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் முக கவசத்தின் முக்கியத்துவம் புரிய வைக்க முயல்வதாக அவர் கூறியுள்ளார்.
விதிமுறை என்பது காவல்துறை மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் பொதுவானது என்பதை அனைவருக்கும் புரிய வைக்கும் வகையில் தாமாகவே முன்வந்து அபராத தொகையை செலுத்தியதாக அவர் கூறினார், மேலும் இந்த காவல்துறை அதிகாரிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன..