இந்த நடிகர் தான் என்னை நிமிஷத்திற்கு நிமிஷம் இரிடேட் செய்வார்!. கண்ணான கண்ணே சீரியல் நடிகை ஓபன் டாக்.!

பிரபல சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சமீப காலங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளார் சீரியல் தான் கண்ணான கண்ணே.

இந்த சீரியல் தெலுங்கில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் பெற்ற பௌர்ணமி என்ற சீரியலின் ரீமேக் ஆகும். இந்த சீரியலின் மூலம் தமிழ் சின்னத்திரை கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளவர் நடிகை நிமிஷிகா. இவரைத் தொடர்ந்து இந்த சீரியலில் பப்லு பிரித்திவிராஜ் மற்றும் ராகுல் ரவி போன்றவர்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இவர் சன் டிவியில் அறிமுகமாவதற்கு முன்பே விஜய் டிவியில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலிலும் நடித்து இருந்தார். இதன்மூலம் தான் இவருக்கு கண்ணான கண்ணே என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது தற்பொழுது உள்ள இளைஞர்கள் மனதை வெகுவாக கவர்ந்துள்ளார் நிமிஷிகா.

இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆச்சரியம் அடைய வைத்துள்ளார். அதோடு தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

எனவே வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும்  நிமிஷமா தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.ரசிகர்களிடம் லைவ் சேட்டில் பேசுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் இவர் சன் மியூசிக்கில் சாட் வித் ஆஷிக் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அப்பொழுது  இந்நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ஆஷிக் நிமிஷிகாவிடம் படப்பிடிப்பில் உங்களை அதிகமாக எரிச்சலடைய செய்யும் நபர் யார் என கேட்டதற்கு சீரியல் ஹீரோ தான் என்னை எப்ப பார்த்தாலும் அடித்துக் கொண்டே இருப்பார் அது எனக்கு எரிச்சலாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.