பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகுகிறாரா கண்ணன்? அவருக்கு பதில் என்ட்ரி கொடுக்கும் கனா காணும் சீரியல் பிரபலம்..

pandiyan-stores-4
pandiyan-stores-4

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் திடீரென சீரியலில் இருந்து விலக இருக்கும் நிலையில் இந்த சீரியலில் கண்ணன் கேரக்டரில் நடிப்பதற்காக கனா காணும் சீரியல் பிரபலம் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தொடர்ந்து ஏராளமான திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் தற்பொழுது நான்கு கண்ணன் தம்பிகளும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில் கடைசி தம்பியான கண்ணன் கிரெடிட் கார்டு மூலம் இலட்சக்கணக்கில் செலவு செய்த நிலையில் இதனால் பேங்கில் இருந்து ஆபிஸர்கள் வந்து கண்ணனை அடித்து விட்டு செல்கிறார்கள்.

எனவே இதனை தெரிந்துக் கொண்ட கதிர் தனது தம்பியை அடித்துவிட்டார்கள் என்பதற்காகவும் தவறாக பெண்களை பேசியதனால் அந்த ஆபிஸர்களை தேடி சென்று மிகவும் கொடூரமாக அடித்து விடுகிறார். எனவே இதனால் போலீஸ் கதிரை அழைத்துச் செல்கிறது இவ்வாறு கதிரை விரைவில் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே எடுக்க வேண்டும் என்பதற்காக ஜீவா, மூர்த்தி முயற்சி செய்து வர பிறகு பேங்க் மேனேஜரிடம் பேசுகிறார்கள் அப்பொழுது அவர்கள் 5 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்தால் கேசை வாபஸ் வாங்குவதாக கூற அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

பிறகு வேறு வழி இல்லாமல் முல்லை, தனம் இவர்களுடைய நகையை அடகு வைத்து பணத்தை தயார் செய்து கதிரை வெளியில் அழைத்து வருகின்றனர். இவ்வாறு கண்ணன் ஐஸ்வர்யாவால் ஒட்டுமொத்த குடும்பமும் கவலையில் இருந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் கண்ணன் கேரக்டரில் நடித்து வரும் சரவணன் இந்த சீரியலில் இருந்து விலகுகிறாராம்.

அதாவது தொடர்ந்து வெள்ளித்திரை வாய்ப்புகள் வருவதனால் இந்த சீரியலில் இருந்து சரவணன் விக்ரம் வெளியேற முடிவெடுத்திருக்கிறார். எனவே இந்த சீரியலில் கனா காணும் சீரியல் பிரபலம் ராஜ வெற்றி பிரபு நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இது தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை எனவே விரைவில் குறித்து தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.