கடைசி ஷூட்டிங்கை முடித்து விட்டு பறந்த கண்ணம்மா – இணையதளத்தில் வேகம் எடுக்கும் புகைப்படம்

bharathi-kanamma
bharathi-kanamma

பொதுவாக தற்போது சீரியல்கள் பெரிதும் மக்களை கவர்ந்து வருகிறது. ரசிகர்கள் மட்டும் காதல் ஜோடிகள் என பலரையும் சீரியல் கவனிக்க வைக்கிறது. அதிலும் குறிப்பாக விஜய் டிவியில் செம ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா தொடர் மக்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த தொலைக்காட்சியிலே இவை நம்பர் 1 சீரியல் ஆக வலம் வந்து கொண்டு இருக்கிறது மற்றும் டிஆர்பியிலும் முதலிடத்தில் வகிக்கிறது.

இந்த சீரியலை கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக பிரவீன் பெண்ணெட் என்பவர் இயக்கி வருகிறார். இவர் கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி, ராஜாராணி சீசன் 1 மற்றும் சீசன் 2 போன்ற ஹிட் சீரியல்களை கொடுத்து வந்தவர். தற்போது இவர் பாரதி கண்ணம்மா தொடரை மிகவும் சுவாரசியமாக எடுத்துச் செல்கிறார்.  இதில் ஹீரோவுக்கு தங்கையாக நடித்து வந்த காவியா அறிவுமணி வேறு ஒரு ஹிட் சீரியலில் வாய்ப்பு வந்ததால் இந்த சீரியலை விட்டு விலகி சென்றார்.

பின்பு அகிலன் கேரக்டரில் நடித்து வந்த வரும் வெள்ளித்திரையில் டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் அவரு இந்த சீரியலை விட்டு விலகிச் சென்றுவிட்டார். தற்போது கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரோஷினி வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் வந்துள்ளதால் அவரும் இந்த சீரியலை விட்டு விலகுவதாக தகவல் வெளிவந்தன. இந்த செய்தி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீரியல் டிஆர்பி யில் முதல் இடத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம் கண்ணம்மா தான்.

தற்போது அவர் இந்த சீரியலை விட்டு விலகுவது பெரிதும் வருத்தம் அடைய வைத்தது. தற்போது இவரது கடைசி நாள் ஷூட்டிங் நிறைவடைந்து உள்ளதாகவும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் பாரதியிடம் கண்ணம்மா பேசிக் கொண்டிருப்பது போல் தெரியவந்துள்ளது. ரோஷினி இந்த தொடரில் இருந்து வெளிவந்த பிறகு அவருக்கு பதில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி என்ற தொடரில் நடித்து வரும் நட்சத்திரா ரோஷினிக்கு பதில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன மற்றும் டிக் டாக் வினுஷா தேவி நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றன.

bharathi-kanamma
bharathi-kanamma

இவர் பார்ப்பதற்கு அச்சு அசல் ரோஷினை போலவே இருப்பாராம். ஆகையால் இவர்கள் இருவரில் ஒருவர் தான் ரோஷினிக்கு பதில் நடிக்க உள்ளவர்கள். மேலும் கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு உரிய படப்பிடிப்புகள் நிறைய ரோஷினி நடித்து முடித்துள்ளார் அதனால் ஒரு சில மாதங்களுக்குப் பிறகே வேறு நடிகை மாற்றப்படுவார் என தகவல்கள் வெளிவந்துள்ளன.