Kannagi Movie: சமூகத்தில் பெண்களுக்கு எதிராக பல விஷயங்கள் நடைபெற்று வருகிறது ஆனால் முன்பை விட தற்பொழுது குறைந்து இருந்தாலும் ஆனால் சில விஷயங்கள் நடைமுறையில் இருந்து தான் வருகிறது. அப்படி வயதுக்கு வந்த பெண்கள் சபரிமலைக்கு சொல்லக்கூடாது என்பது வழக்கம் எனவே இது போன்ற ஒரு சீனை கண்ணகி படத்தின் கிளைமாக்ஸில் இயக்குனர் யஷ்வந்த் கிஷோர் வைத்துள்ளாராம்.
சமீபத்தில் அயலி வெப் சீரிஸ் வெளியானது இதில் வயதுக்கு வந்த பெண்கள் கோவிலுக்கு போகக்கூடாது என்பது ஊர் கட்டுப்பாடு ஆனால் அதையும் மீறி எப்படி வயதுக்கு வந்த பெண்கள் கோவிலுக்கு செல்கிறார்கள் என்பதை வைத்து உருவாகி இருந்தது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
அதேபோல் தற்பொழுது கண்ணகி படத்திலும் அப்படி ஒரு காட்சி இடம் பெற்றிருப்பதாக தகவல் கிடைத்திருக்கும் நிலையில் இதனால் சர்ச்சைக்கு கிளம்புமா கேள்வி எழுந்துள்ளது.
கீர்த்தி பாண்டியா, அம்மு அபிராமி, வித்யா பிரதீப் மற்றும் ஷாலின் ஜோயா போன்ற நான்கு பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து கண்ணகி படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி என்று ஸ்நீக் பீக்கை படக்குழு வெளியிட்டு பரபரப்பு கிளப்பி உள்ளது.
லோகேஷின் 10 நிமிட வீடியோவை பல கோடி கொடுத்து வாங்கிய ஓடிடி நிறுவனம்.. அப்படி என்ன வீடியோ டா அது?
அதில் அம்மு அபிராமி மணகோலத்தில் திருமணத்திற்கு தயாராகி இருக்க அவருக்கு பீரியட்ஸ் ஏற்பட்டிருக்கிறது எனவே கோவிலுக்குள் செல்லாமல் கீழே ஒரு ஓரமாக இருக்கும் தனது மகளை தேடி வரும் தாய் மௌனிகாவுக்கு இந்த விவரம் புரிந்து விட அவர் தவிக்கும் தவிப்பு பெண்களை மிகவும் கவர்ந்து விடும்.
பீரியட்ஸ் ஏற்பட்ட நிலையில் கோவிலில் படியேற மணப்பெண் யோசிக்க ஒட்டுமொத்த சொந்தங்களும் மாப்பிள்ளையையும் திருமணத்துக்கு ரெடியாகி இருக்க மௌனிகா செய்யும் காரியமும் அவர் கொடுக்கும் தைரியத்தால் மணமேடைக்கு வந்து அம்மு அபிராமி அமரும் காட்சியும் பாராட்டுகளை பெற உள்ளது. மேலும் விதவையான தான் அங்கே நிற்கக்கூடாது என மௌனிகா மணமேடையை விட்டு நகர்ந்து செல்கிறார். ஆனால் அந்த முற்போக்கான காட்சி படம் வெளியான பின் சில சர்ச்சைகளை சந்திக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.