காஞ்சனா படத்தினால் தான் என்னுடைய வாழ்க்கை நாசமா போய்விட்டதாக திருநங்கை பிரியா ஆளித்திருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது கோலிவுட் திரைவுலகில் பிரம்மாண்டமான இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ராகவா லாரன்ஸ் நடனத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான இவர் அதன் பிறகு நடன இயக்குனராக பணியாற்றி வந்தார்.
தற்பொழுது இயக்குனர், தயாரிப்பாளர் நடிகர் நடன இயக்குனர் என பன்முக திறமைகளை கொண்டு வலம் வருகிறார் இவருடைய நடிப்பில் சமீபத்தில் ருத்ரன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.இதனை அடுத்து தற்போது துர்கா என்ற பேய் படத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார் அந்த படத்தினை இவருடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீ ராகவேந்திரா ப்ரோடுக்ஷன் தயாரித்து வருகிறது. மேலும் இதனை அடுத்து 17 வருடங்களுக்குப் பிறகு உருவாகும் சந்திரமுகி 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் முதல் பாகத்தினை இயக்கிய இயக்குனர் பி வாசு தான் இரண்டாவது பாகத்தையும் இயக்குகிறார். மேலும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் கொடி புகழ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.
இவ்வாறு அடுத்தடுத்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். ராகவா லாரன்ஸ் நடிப்பில் வரும் பேய் படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைப்பது உண்டு அப்படி முனி படத்தில் தொடங்கி காஞ்சனா 1 காஞ்சனா 2 காஞ்சனா 3 என வரிசையாக வித்தியாசமான கதை கலத்துடன் பேய் படங்களில் நடித்து கலக்கியிருந்தார்.
இந்நிலையில் காஞ்சனா படத்தில் நடித்ததால் தான் என்னுடைய வாழ்க்கை அழிந்து விட்டதாக திருநங்கை பிரியா அளித்திருக்கும் பெட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான காஞ்சனா திரைப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
அந்த வகையில் திருநங்கை வேடத்தில் சரத்குமாரின் மகளாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் பிரியா. இவர் சமீப பேட்டியில் காஞ்சனா படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு அந்த படத்திற்கு முன்பு நான் சாதாரண வாழ்க்கையை தான் வாழ்ந்து வந்தேன் அந்த படத்தில் நடித்ததால் நான் கோடி கோடியாக சம்பாதித்து விட்டேன் என நினைக்கிறார்கள். ஆனால் அந்த படத்திற்கு பிறகு எனக்கு எந்த ஒரு பட வாய்ப்புமே கிடைக்கவில்லை வேறு வேலையும் கூட எதுவும் பார்க்க முடியவில்லை என்று கண்ணீர் மல்க கூறி உள்ளார்.