யார் பார்த்த வேலைடா இது… சூர்யாவின் கங்குவா படப்பிடிப்பிலிருந்து லீக்கான புகைப்படம்..

suriya movie
suriya movie

Kanguva : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா இவர் நடிப்பில் பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக வெளியாகி உள்ளன இந்த நிலையில் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் கங்குவா.

இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா அவர்கள் தான் இயக்கி வருகிறார் இவர் இதற்கு முன் இயக்கிய வீரம், விவேகம், விசுவாசம், அண்ணாத்த ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் தற்பொழுது சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

விஜய்யையே வாய்ப்பிளக்க வைத்த பிரசாந்த்.. டாப் ஸ்டார்னா சும்மாவா..! GOAT படப்பிடிப்பில் நடந்த சுவாரசியம்..

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடீன் கிங்ஸ்லி, ஆகியோர்கள் நடித்து வருகிறார்கள் படத்தை யூவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது.

படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைத்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிவடைந்தது இந்த நிலையில் நடிகர் சூர்யா கடைசி படப்பிடிப்பின் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

26 வயது நடிகையுடன் ரொமான்ஸ் செய்ய சொல்றாங்க வேதனையை பகிர்ந்த ரஜினி.! வைரலாகும் வீடியோ

3டியில் உருவாகும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, உள்ளிட்ட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது மேலும் ரசிகர்கள் இந்த திரைப்படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த நிலையில் இந்த திரைப்படத்திலிருந்து ஒரு புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் யார் பார்த்த வேலைடா இது இப்படி லீக் பண்ணிட்டீங்களே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.