Kangana Ranaut : பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தமிழில் நடித்துள்ள திரைப்படங்களின் லிஸ்ட் இதோ
சந்திரமுகி 2 : பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் சந்திரமுகி 2. இந்த திரைப்படம் காமெடி நிறைந்த திகில் திரைப்படமாக உருவாகியுள்ளது இந்த திரைப்படத்தில் கங்கனா ரனாவத் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் அழகான நடன கலைஞராகவும் பிறகு பேயாகவும் படத்தில் மிரட்டி உள்ளார்.
தலைவி : ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் தலைவி இந்த திரைப்படத்தில் கங்கனா ரனாவத் பிரபல நடிகையாக இருந்து பின்பு அரசியல்வாதியாக நடித்திருப்பார் கிட்டத்தட்ட ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தான் இது ஜெயலலிதா போலவே இந்த திரைப்படத்தில் மாறினார் மேலும் இந்த திரைப்படத்திற்காக தனது உடல் எடையை அதிகரித்தார் எனக் கூறப்பட்டது படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது.
மணிகர்ணிகா : தி குயின் ஆஃப் ஜான்சி என்ற திரைப்படத்தில் லட்சுமிபாய் கதாபாத்திரத்தில் தான் கங்கனா ரனாவத் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தை கிரிஷ் ஜாகர்லால் முடியுடன் இணைந்து இயக்கிய வரலாற்று ஹிந்தி திரைப்படம். இந்த திரைப்படத்தில் தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது அதேபோல் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
தாம் தூம் : 2008 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தாம் தூம் இந்த திரைப்படத்தில் கங்கனா ரனாவத் ஒரு அப்பாவி கிராமத்து பெண்ணை போல் நடித்திருந்தார் இந்த திரைப்படம் காதல் திர்ல்லரில் உருவாகி இருந்தது ஆனால் இந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஜீவா படம் முடிவதற்குள் காலமானதால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை ஆனாலும் கங்கனா ரனாவத் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது.
மேலும் சினிமாவில் தொடர்ந்து கங்கனா ரனாவத் பல்வேறு திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார் பாலிவுட்டில் கணிசமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார் பாலிவுட்டில் இருந்தாலும் தமிழ் சினிமாவில் இடைவிடாது தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.