சந்திரமுகியாக ஜோதிகாவிடம் தோற்றுப் போன கங்கனா ரனாவத்.. ஆட்டக்காரி கிடைக்கலன்னு தோட்டக்காரியை சிங்காரிச்சிட்டாங்க போல..

Chandramukhi
Chandramukhi

Chandramukhi 2 : சந்திரமுகி படத்தை தொடர்ந்து பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான திரைப்படம் சந்திரமுகி 2. படம் நேற்று செப்டம்பர் 28 ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து மகிமா நம்பியார், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவி மரினா..

சுரேஷ் சந்திர மேனன், ரியோ ரமேஷ், விக்னேஷ், லட்சுமி மேனன்,  ஸ்ருஷி டாங்கே மற்றும் பலர் நடித்திருந்தனர் படத்தின் கதை என்னவென்றால்.. பணக்கார குடும்பமான ராதிகா குடும்பம் அடுத்தடுத்த பிரச்சனைகளை சந்திக்கிறது மேலும் பிசினஸிலும் முன்னேற்றம் இல்லாமல் பாதிக்கப்படுகிறது இதற்கெல்லாம் என்ன காரணமாக தெரிந்து கொள்ள அவருடைய சாமியாரை கூப்பிடுகிறார்கள்.

அவர் வந்து நீங்கள் உங்களுடைய குலதெய்வ கோயிலுக்கு போகவே இல்லை அதுதான் முக்கிய காரணம் உங்களுடைய  அம்மா அப்பா எல்லாருமே அங்கு போய் சாமி கும்பிட்டு இருப்பார்கள் அதனுடைய அருள் உங்களுக்கு கிடைக்க வேண்டும் எனவே நீங்கள் உங்களுடைய குலதெய்வம் கோயிலுக்கு சென்று ஒரு மண்டலம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும் என சொல்லுவார்.

அதைக் கேட்டு ராதிகாவின் மொத்த குடும்பமும் அங்கு செல்லும் ராதிகாவின் மகள் வேறு ஒரு மதத்தைச் சார்ந்தவரை கல்யாணம் செய்துகொண்டு தனியாக போய் இருப்பார் ஆனால் அவர்கள் ஒரு விமான விபத்தில் இறந்துவிட அந்த குழந்தைகளை ராகவா லாரன்ஸ் வளர்த்து வருவார் அந்த குழந்தைகளையும் வர சொல்லி இருப்பதால்  ராகவா லாரன்ஸ் அழைத்துச் செல்வார்.

இவர்கள் தங்கும் அந்த அரண்மாலையில் சில மர்மங்கள் இருக்கும் ஆனால் அதை வெளியே வடிவேலு மழுப்பி விடுவார் ஆனால்  ஸ்ருஷி டாங்கே, மதிமா நம்பியாருக்கு அந்த இடத்தில் என்ன இருக்கும் என தெரிந்து கொள்ள ஆசைப்படுவார்கள். அதன் பிறகு யார் சந்திரமுகியாக மாறுகிறார்கள் என்பது தான் கதை..

முதல் பாதியே காமெடியும் கொஞ்சம் திரில்லர் கலந்திருந்தாலும் இரண்டாவது பாதி சற்று விறுவிறுப்பாக எடுத்து இருந்ததால் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது இந்த படத்தில் லட்சுமிமேனன் சந்திரமுகியாக மாறி இருப்பார் பிளாஷ்பேக் காட்சியில் கங்கனா ரனாவத் சந்திரமுகியாக நடித்தார்.

சந்திரமுகியாக கங்கனா ரனாவத் நடிப்பு பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும் ஜோதிகா அளவிற்கு இவர் சந்திரமுகியாக மிரட்டவில்லை.. ஜோதிகா கண்ணில் எக்ஸ்பிரஷன் அந்த அளவுக்கு இருக்கும் ஆனால் கங்கனா ரனாவத்திடம் அது எடுபடவில்லை.. ஜோதிகா கிளாமர் காட்டமாட்டார்.

Chandramukhi
Chandramukhi

இவர் படம் முழுக்க சற்று கிளாமராக வருகிறார் மேலும் ஜோதிகா கம்பீரமான குரலில் நம்மை நடுநடுங்க வைப்பார் ஆனால் கங்கனா ரனாவத் அதை எதிர்பார்க்க முடியவில்லை மொத்தத்தில் சந்திரமுகியாக ஜோதிகாவிடம்  கங்கனா ரனாவத் தோற்றுப் போய்விட்டார். சந்திரமுகி 2 மக்கள் கொண்டாடும்  படமாக இருக்கிறது.