விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வரும் நிலையில் பல்வேறு சீரியல்களும் ஒளிபரப்பாகி வருகிறது அதில் இளசுகளை டார்கெட் செய்து எடுக்கப்பட்ட சீரியல்தான் கனா காணும் காலங்கள் இந்த சீரியலை யாராலும் மறக்க முடியாது. அந்த அளவிற்கு பள்ளிப்பருவ கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட சீரியல் ஆகும்.
இவ்வாறு இந்த சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பொழுது விஜய் டிவிதான் டிஆர்பி முன்னிலையில் இருந்தது மேலும் இதனை தொடர்ந்து இந்த சீரியலில் தொடர்ச்சியாக கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என பல வகைகளாக உருவாக்கப்பட்டன.
இவ்வாறு தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட இந்த தொடர்களும் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் இந்த தொடரில் நடித்த பிரபலங்கள் பலரும் தற்போது சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
அதேபோல இவர்களை வைத்து பட்டாளம் என்ற திரைப்படத்தையும் உருவாக்கினார்கள். இந்த திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் வசூலிலும் வெளுத்து வாங்கியது. ஆனால் இந்த சீரியலில் நடித்த பலர் தற்போது அட்ரஸ் இல்லாமல் இருந்து வருகிறார்கள்.
அதேபோல இந்த சீரியலில் புகழ்பெற்ற பச்சை என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை இந்நிலையில் ரியூனியன் ஒன்றை ஆரம்பித்து இதில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டார்கள் அதில் கனா காணும் காலங்கள் சீரியல் நடித்த பலரும் இடம் பெற்றுள்ளார்கள் இதோ அவர்களின் புகைப்படங்கள்.