சின்னத்திரை வெள்ளித்திரை என சினிமாவில் கலக்கி வந்த ஏராளமான பிரபலங்கள் தொடர்ந்து அடுத்தடுத்து மரணமடைவது வழக்கமாக இருந்து வருகிறது. அப்படி தற்பொழுது சின்னத்திரை நடிகர் நேத்ரன் தற்பொழுது கேன்சரால் பாதிக்கப்பட்டிருப்பதாக அவருடைய மகள் மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
நேத்ரன் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக சின்னத்திரையில் நடித்து வருகிறார். இவர் தீபா என்ற சீரியல் நடிகையை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதியினர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் அபிநயா கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்திருந்தார்.
இதன் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த அபிநயா சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் ரசிகர்கள் பலர் இவரை பின்பற்றி வருகின்றனர். அப்படி சமீபத்தில் இவர் வெளியீட்டிருக்கும் பதிவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது எனக்கு இதை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை கொஞ்ச வரமாகவே மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார் அவருக்கு கேன்சர் பாசிடிவ் வந்துள்ளது. சர்ஜரி பண்ணிட்டாங்க ஆனால் கல்லீரலில் மீண்டும் பாதிப்பு இருப்பதாக கூறி ஐசியு-வில் வச்சிருக்காங்க.
இதனை நான் ரொம்ப நாளாக ஷேர் செய்ய தயங்கினேன், நீங்கள் எல்லாரும் அப்பாவுக்கு பிராத்தனை செய்தால் அந்த பாசிடிவ்வால் அவர் சீக்கிரம் சரியாகி வருவார் என பகிர்ந்துள்ளார்.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்