டாப் நடிகர்கள் படங்களை ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்நோக்கி காத்திருப்பது வழக்கம் அந்த வகையில் உலக நாயகன் கமலஹாசன் நான்கு வருடங்களுக்கு பிறகு விக்ரம் திரைப் படத்தில் நடித்தாலும் அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு இந்திய அளவில் இருந்தது.
ஒரு வழியாக கடந்த ஜூன் 3ஆம் தேதி கோலாகலமாக வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது. படம் முழுக்க முழுக்க போதைப்பொருள் சம்பந்தப்பட்ட ஒரு படமாக இருந்தது இதில் கமல் எப்படி எதிரிகளை தடுத்து அந்த போதை பொருளை அழிக்கிறார் என்பது தான் படம்.
இந்த படத்தில் கமலுடன் சேர்ந்து மலையாள நடிகர் பகத் பாசில் சிறப்பாக நடித்து அசத்தியுள்ளார். வில்லன் கேரக்டரில் நடிகர் விஜய் சேதுபதி மிரட்டியுள்ளார். படம் சிறப்பாக இருப்பதனால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் சூர்யாவும் கடைசியாக மெயின் வில்லன் ரோலில் மிரட்டி விட்டு போவார்.
அது ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்டாக உள்ளது. இப்படியே விக்ரம் படத்தில் பல சிறப்பான சம்பவங்கள் இருக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் விக்ரம் திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்கள் ஆன நிலையில் எவ்வளவு வசூல் செய்து உள்ளது குறித்து தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் கமலின் விக்ரம் திரைப்படம் இதுவரை 100 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதை தாண்டி மற்ற ஏரியாக்களின் கேரளா, தெலுங்கு,கர்நாடகா பகுதிகளில் இரண்டு நாட்களில் எவ்வளவு வசூல் செய்து உள்ளது என்பது குறித்த தகவலும் கிடைத்துள்ளது. கேரளாவில் – 9+ கோடிகள். ஆந்திரா / தெலுங்கானா – 7.5 கோடிகள். கர்நாடகா – 7.5 கோடிகள்.