இப்பவும் வசூலில் ருத்ர தாண்டவம் ஆடும் கமலின் “விக்ரம் திரைப்படம்” – உலகம் முழுவதும் இத்தனை கோடியா.?

vikram
vikram

நடிப்பில் பின்னி படலெடுக்கும் உலகநாயகன் கமலஹாசன் கடந்த நான்கு வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் உலக நாயகன் கமலஹாசனை சந்தித்து லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் கதையை கூற அது அவருக்கு ரொம்ப பிடித்து போகவே.. விக்ரம் படத்தில் உலக நாயகன் கமலஹாசன் நடித்தார்.

மேலும் இந்த திரைப்படத்தை உலக நாயகன் கமலஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் மிகப் பிரமாண்ட பொருள் செலவில் தயாரித்தது இந்த படத்தில் உலக நாயகன் கமலஹாசன் உடன் கைகோர்த்து பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா, நரேன், காயத்ரி, ஏஜென்ட் டினா மற்றும் பல பிரபலங்கள் நடித்து அசத்தினர்

படம் ஒரு வழியாக ஜூன் மூன்றாம் தேதி திரையரங்கில் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்து போனதால் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று  நீண்ட நாட்களாக ஹவுஸ் புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து   படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர், லோகேஷ்..

மற்றும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்த சூர்யா என பலருக்கும் பரிசு பொருட்களை கொடுத்து அசத்தினார் உலகநாயகன் கமலஹாசன். இதுவரை விக்ரம் திரைப்படம் உலக அளவில் சுமார் 420 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் மட்டுமே 175 கோடி வசூல் செய்துள்ளதாம். இன்னும் இந்த திரைப்படம் 150 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. வருகின்ற நாட்களிலும் விக்ரம் திரைப்படம் பிரம்மாண்ட ஒரு வசூலை அள்ளித்தான் நிற்கும் என பலரும் கூறி வருகின்றனர். இதனால் படக்குழு செம சந்தோஷத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.