இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழில் படமெடுக்க தொடங்கிய ஆரம்பத்திலேயே சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து சினிமாவில் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளார். இவர் இதுவரை இயக்கிய நான்கு படங்களுமே ப்ளாக்பஸ்டர் மூவிகள் ஆகும்.
அந்த வகையில் அண்மையில் கமலஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் நரேன் போன்ற முக்கிய நடிகர்களை வைத்து விக்ரம் இன்னும் ஆக்சன் படத்தை எடுத்து இருந்தார். லோகேஷ் ஆக்சன் படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவர் அந்த வகையில் தனது ஆசை நாயகன் கமலஹாசனுடன்..
இணைந்து சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருவதோடு மட்டுமல்லாமல் வசூலை வாரி குவித்து வருகின்றன . விக்ரம் படம் தமிழைத் தாண்டி ஆந்திரா கர்நாடகா மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் தமிழில் பாகுபலி 2 படத்தின் வசூலை முறியடித்துள்ளது விக்ரம் படம். விக்ரம் திரைப்படம் 21 நாட்கள் முடிவில் தமிழ்நாட்டில் 162 கோடியும் கேரளாவில் 36 கோடி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 29 கோடி கர்நாடகாவில் 22 கோடி மற்றும் இதை தவிர வெளிநாடு வசூல் என ஒட்டுமொத்தமாக விக்ரம் திரைப்படம் இதுவரை 375 கோடி வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரஜினியின் 2.0 படத்தின் வசூல் இருக்கு பிறகு இரண்டாவது இடத்தில் விக்ரம் திரைப்படம் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இனி வருகின்ற நாட்களிலும் விக்ரம் படம் 500 கோடியை தொட்டு சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது