உலகநாயகன் கமலஹாசன் விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் ஆகிய படங்களுக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்து அரசியல், வியாபாரம், சின்னத்திரையில் தொகுப்பாளர் என தொடர்ந்து மற்றவற்றில் பிசியாக தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்த நிலையில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
உலக நாயகன் கமலை பார்த்து ஒரு கதையை கூறவே அது உடனடியாக படமாக்கப்பட்டது அந்த படத்திற்கு விக்ரம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக உருவாகி உள்ளதால் மக்கள் மத்தியில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
படம் வருகின்ற ஜூன் 3 ஆம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது இந்த படத்தில் கமலுடன் சேர்ந்து விஜய்சேதுபதி, பக்த் பாசில், சூர்யா, நரேன் மற்றும் பல ஜாம்பவான்கள் இந்த படத்தில் நடித்து அசத்தினார். விக்ரம் படம் தமிழ்நாட்டையும் தாண்டி மலையாளம், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் படம் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.
படம் வெளிவர இன்னும் ஓரிரு தினங்களில் உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக செய்து வருகிறது. கமல் குறித்தும், விக்ரம் படம் குறித்து நடிகர்கள் தொடங்கிய இயக்குனர் வரை பலரும் பல்வேறு பேட்டிகள் கொடுத்து வருவதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டே இருக்கிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு சில இடங்களில் ப்ரீ புக்கிங் நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக வெளிநாடுகளில் ப்ரீ புக்கிங் ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. இதுவரை 150k டாலர் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.