வலிமை, பீஸ்ட் படத்தின் வசூலை முந்திய கமலின் “விக்ரம் படம்” – மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.?

vikram-movie-
vikram-movie-

உலகநாயகன் கமலஹாசன் கடந்த 4 வருடங்களுக்கு பிறகு இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து விக்ரம் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார் இயக்குனர் லோகேஷ் ஆக்சன் திரைப்படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர்.

அந்த வகையில் தனது ஆசை நாயகன் கமலுக்காக ஒரு ரசிகனாய் விக்ரம் படத்தின் கதையை பார்த்து பார்த்து செதுக்கி உள்ளார். படம் கடந்த ஜூன் மூன்றாம் தேதி தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற பல மொழிகளில் வெளியாகி தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ் சினிமாவில் அண்மையில் வெளிவந்த பீஸ்ட், வலிமை, எதற்கும் துணிந்தவன் போன்ற படங்கள்..

கலவையான விமர்சனத்தை பெற்று வந்த நிலையில் விக்ரம் திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்துள்ளது. அந்த வகையில் எங்கு பார்த்தாலும் விக்ரம் படத்தின் பேச்சுதான் படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வசூலை வாரிக் குவித்து வருகிறது.

விக்ரம் படம் தமிழை தாண்டி ஆந்திரா கர்நாடகா கேரளா போன்ற அனைத்து இடங்களிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் உலகநாயகன் கமலஹாசன் படத்தில் பணியாற்றிய இயக்குனர்களுக்கு விலைமதிப்பில்லாத பல பரிசுகளையும் வழங்கி வருகிறார் இந்த நிலையில் தற்போது வரை விக்ரம் திரைப்படம்.

உலகம் முழுவதும் ரூ 230 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது  இதனால் அண்மையில் வெளிவந்த டாப் நடிகர்களின் படங்களான பீஸ்ட் வலிமை போன்ற படங்களின் மொத்த வசூலையும் விக்ரம்படம் முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வருகின்ற நாட்களிலும் விக்ரம் படம் நல்ல வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.