உலகநாயகன் கமலஹாசன் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய இளம்வயதில் ஹீரோ வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து தன்னை தக்கவைத்துக் கொண்டவர். பின்பு தொடர்ந்து சினிமாவில் ஹீரோவாக மட்டுமே நடித்து உலக நாயகன் என்ற பட்டமும் பெற்றார்.
தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்த கமலஹாசன் இடையில் சில வருடங்களாக அரசியல், தொழில் நிறுவனம் போன்ற பலவற்றிலும் கவனம் செலுத்தி வந்ததால் படங்களில் அதிகம் கமிட் ஆகாமல் இருந்து வந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சொன்ன கதை.
கமலுக்கு பிடித்துப்போகவே விக்ரம் என்ற படம் உருவாகியது இந்த படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் கமலின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்தது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு கமலை வெள்ளித்திரையில் காண ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் படம் கடந்த ஜூன் 3-ம் தேதி.
அன்று வெளியாகி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. விக்ரம் படத்தை காண திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகின்றன மேலும் படம் எதிர்பார்க்காத அளவு வசூலை ஈட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அண்மையில் வெளிவந்த டாப் நடிகர்களின் படங்களான பீஸ்ட், வலிமை, எதற்கும் துணிந்தவன், டான் போன்ற படங்களில் பீஸ்ட் படம்.
அதிக வசூலை அள்ளி முதல் இடத்தில் இருந்த நிலையில் விக்ரம் படம் அமெரிக்காவில் வெளிவந்த இரண்டே நாட்களில் 1.3 மில்லியன் டாலர் வசூலை அள்ளி உள்ளது இதன் மூலம் பீஸ்ட் படம் அமெரிக்காவில் அள்ளிய மொத்த வசூலையும் விக்ரம்படம் இரண்டே நாளில் முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது