வசூலில் புதிய சாதனை படைத்த கமலின் “விக்ரம் திரைப்படம்” – சென்னையில் மட்டுமே இத்தனை கோடியா.? வியப்பில் மற்ற நடிகர்கள்.!

vikram-movie
vikram-movie

இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஆக்சன் திரைப்படங்களை எடுத்து வெற்றி கண்டு வருகிறார். மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து தனது ஆசை நாயகன் உலக நாயகன் கமலஹாசனுக்காக பார்த்து பார்த்து விக்ரம் படத்தின் கதையை அவரிடம் சொன்னார் கமலுக்கு கதை ரொம்ப பிடித்து போகவே அந்த படத்தில் நடித்தார்.

மேலும் இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் கதைப்படி கமலுக்கு நிகராக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களான பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா, நரேன் மற்றும் பல பிரபலங்கள் நடித்தனர்.  ஒரு வழியாக ஜூன் மூன்றாம் தேதி திரையரங்கில் வெளியானது.

படம் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அனைத்து ஏரியாக்களிலும் சூப்பராக ஓடியது அதன் காரணமாக வசூலிலும் விக்ரம் திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வசூல் வேட்டை நடத்தியது. தற்பொழுது வரை  சுமார் 442 கோடி வசூல் செய்துள்ளது.

குறிப்பாக தமிழகம், கேரளா மற்றும் சென்னையில் மட்டுமே இந்த திரைப்படம் மிகப்பெரிய ஒரு வசூல் வேட்டை நடத்தியது குறிப்பாக சென்னை ஏரியாவில் மட்டும் கமலின் விக்ரம் திரைப்படம் ருத்ரதாண்டவம் ஆடியது தற்போது வரையிலும் அங்கு மட்டுமே சுமார் 17 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இச்செய்தி  படக்குழுவையும், கமலையும் செம்ம சந்தோஷத்தில் அழுத்தி உள்ளது. விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷன் அடுத்த பட வாய்ப்புகளை கைப்பற்றி உள்ளார். அதேபோல கமலும் சந்தோஷத்துடன் தேவர்மகன் 2, இந்தியன் 2 போன்ற படங்களில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.