புஷ்பா படத்தின் வசூலை பந்தாடிய கமலின் விக்ரம் திரைப்படம் – அடுத்த டார்கெட் இந்த படம் தான்.!

kamal
kamal

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து வரும் திரைப்படம் விக்ரம் இந்தபடம் ஜூன் 3ஆம் தேதி உலக அளவில் வெளியானது. படம் முழுக்க முழுக்க ஆக்சன் சென்டிமெண்ட் திரில்லர் கலந்த படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்பத்தினரை வெகுவாக கவர்ந்து இழுத்தது.

இதனால் படம் நல்ல வசூலை காண ஆரம்பித்தது தமிழகத்தையும் தாண்டி விக்ரம் திரைப்படம் கேரளா கர்நாடகா ஆந்திரா போன்ற இடங்களில் நல்ல வசூலை அள்ள ஆரம்பித்ததால் வெகு விரைவிலேயே 100 கோடி, 200 கோடி எல்லாம் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது வரை விக்ரம் திரைப்படம் சுமார் 400 கோடியை தொட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் கமலுடன் கைகோர்த்து பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா, நரேன், காயத்ரி மற்றும் பல டாப் நட்சத்திர பிரபலங்கள் நடித்து அசத்தினார். விக்ரம் படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதால் தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களான ரஜினி விஜய் அஜித் ஆகியோர்களை முந்தி தற்போது கமல் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

விக்ரம் திரைப்படம் சுமார் 500 கோடி வசூல் செய்து இருக்க வேண்டும் ஆனால் ஹிந்தியில் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை அதன் காரணமாகவே நூறுகோடி கம்மியாகி உள்ளதாக பலர் கூறிவருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் விக்ரம் திரைப்படம் தெலுங்கில் வெளியான புஷ்பா திரைப்படத்தின் வசூலை ஓவர்டேக் செய்து தற்போது முந்தி உள்ளதாக கூறப்படுகிறது

புஷ்பா திரைப்படம் ஒட்டு மொத்தமாக சுமார் 365 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது ஆனால் கமலின் விக்ரம் திரைப்படம் 400 கோடியை தொட்டு முறையடித்துள்ளது அடுத்ததாக பிரபாஸின்  சாஹா திரைப்படத்தின் வசூலை முறியடிக்க இருக்கிறது இந்த படம் அதிகபட்சமாக சுமார் 433 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது வெகுவிரைவிலேயே கமலின் விக்ரம் திரைப்படம் இந்த வசூலையும் முறியடிக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.