ரசிகர்களை சந்தோஷப்படுத்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கமலின் “விக்ரம் திரைப்படம்”.! எப்போது தெரியுமா.?

vikram-movie
vikram-movie

உலகநாயகன் கமலஹாசன் சினிமா உலகில் எப்படிப்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் சூப்பராக நடித்து அசத்துவார் அந்த வகையில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் இருப்பினும் கடந்த நான்கு வருடங்களாக சினிமா பக்கம் செல்லாமல் அரசியல், வியாபாரம் மற்றும் சின்னத்திரை பக்கமும் சென்று வலம் வந்தார்.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் கமலஹாசனுக்கு விக்ரம் படத்தின் கதையை கூற அந்த கதை அவருக்கு  ரொம்ப பிடித்து போகவே அந்த படத்தில் துணிந்து நடித்ததோடு மட்டுமல்லாமல் அந்த படத்தை தயாரிக்கவும் செய்தார் படம் ஒரு வழியாக ஜூன் மூன்றாம் தேதி திரையரங்கில் வெளியானது.

இந்த படம் தமிழ்நாட்டையும் தாண்டி மற்ற இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று சூப்பராக ஓடியது. அதன் காரணமாக இந்த படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்தது இந்த படம் ஒட்டுமொத்தமாக சுமார் 430 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ஷேர் மட்டுமே கமலுக்கு மிகப்பெரிய ஒரு தொகை வந்துள்ளதால் அவர் செம சந்தோஷத்தில் இருக்கிறாராம்..

இந்த ஆண்டில் வெளிவந்த RRR, கே ஜி எஃப் 2 படங்களுக்கு நிகராக விக்ரம் படம் பெரிய அளவில் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தொடர்ந்து இதன் அடுத்த பாகமும் லோகேஷ் கனகராஜ் இயக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் விக்ரம் திரைப்படம் எப்பொழுது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்பது குறித்தும் தற்பொழுது தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி பார்க்கையில் இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 24ஆம் தேதி ஸ்டார் கோல்ட் சேனலில் ஒளிபரப்பாக உள்ளதாம். விக்ரம் படம் திரையரங்கு OTT தளத்தில் வெற்றி பெற்ற நிலையில் தொலைக்காட்சியிலும் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று அசத்தும் எனப் படக்குழு நம்பி இருக்கிறது ரசிகர்களும் இந்த படத்தை பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.