இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசனை வைத்து இயக்கி வெற்றி கண்ட திரைப்படம் விக்ரம். இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் கலந்த திகில் படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களை வெகுவாக கவர்ந்து இழுத்தது.
மேலும் இந்த படத்தில் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக கமலுடன் சேர்ந்து பகத் பாசில், விஜய் சேதுபதி, ஏஜென்ட் டினா, சூர்யா, நரேன், காயத்ரி போன்றோரும் நடித்துள்ளனர். இது இந்தப் படத்திற்கு இன்னும் பக்கபலமாக அமைந்துள்ளது.
23 நாட்களை தொட்ட பிறகும் இந்த படத்திற்கான வரவேற்பு குறையாமல் ஹவுஸ் புல்லாக பல்வேறு திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் காரணமாக நல்ல வசூலை அள்ளி வருகிறது விக்ரம் திரைப்படம் 23 நாள் முடிவில் மட்டுமே விக்ரம் திரைப்படம் சுமார் 350 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வருகின்ற நாட்களிலும் நல்லதொரு வசூலை அள்ளி 400 கோடி கிளப்பில் விக்ரம் திரைப்படம் இணையும் என பேசப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் விக்ரம் திரைப்படம் சென்னை ஏரியாவில் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தற்போது தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி பார்க்கையில் 23 நாள் முடிவில் விக்ரம் திரைப்படம் இதுவரை சுமார் 16 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது சென்னை ஏரியாவில் அதிகம் வசூல் செய்த திரைப்படமாக இருப்பது ரஜினியின் 2.0 திரைப்படம் சென்னை ஏரியாவில் மட்டும் சுமார் 25 கோடி வசூலித்தது. இதை விக்ரம்படம் ஓவர் டேக் செய்யுமா என்றால் அது கேள்விக்குறி தான்.