முன்பதிவில் மாஸ் காட்டும் கமலின் விக்ரம் திரைப்படம் – முக்கிய இடத்தில் இத்தனை ஆயிரம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதா..

vikram-movie
vikram-movie

சினிமா உலகில் ஒரு சில கஷ்டமான கதாபாத்திரங்கள் பெரும்பாலான நடிகர்கள் தவிர்ப்பது வழக்கம் காரணம் அந்த கதாபாத்திரத்திற்காக உடல் எடையை ஏற்றுவதும் குறைப்பது மற்றும் அந்த கதாபாத்திரத்திற்காக மேக்கப்போடுவது அதற்கான நேரமும் அதிகரிக்கும் என்பதால் ஒரு சிலர் தவிர்க்கின்றனர்.

ஆனால் உலக நாயகன் கமலஹாசன் கஷ்டமான கதாபாத்திரத்திலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி வருவதால் அவரை  ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர் மேலும் அவரை உலக நாயகன் கமலஹாசன் எனவும் செல்லமாக அழைத்து வருகின்றனர் நீண்ட இடைவெளிக்கு பிறகு கமலஹாசன் விக்ரம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

படம் வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது இந்த படத்தில் கமலுடன் கைகோர்த்து விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன் போன்ற மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி உள்ளதால் கமல் கேரியரில் மிக முக்கியமான திரைப் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது படம் நாளை வெளிவர உள்ள நிலையில் விக்ரம் படத்தின் முன்பதிவு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக தமிழ்நாட்டையும் தாண்டி வெளிநாடுகளில் முன்பதிவு நிறைய டிக்கெட்டுகளை விற்று அசத்தி உள்ளது. குறிப்பாக USA – வில் மட்டும் 25 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுள்ளதாம். இதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு அசதி உள்ளது இதோ நீங்களே பாருங்கள்.