வசூலில் புதிய உச்சத்தைத் தொட்ட கமலின் “விக்ரம் திரைப்படம்” – இதுவரை அள்ளிய கோடிகள் எவ்வளவு தெரியுமா.?

vikram-movie-
vikram-movie-

சினிமா உலகம் நாளுக்கு நாள் வளருகிறது அதேபோல தனது எண்ணங்களை புதிதாக வளர்த்துக்கொண்டு புது விதமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது நடிகர் கமலின் வழக்கம்.  ஆனால் கடந்த நான்கு வருடங்களாக படங்களில் நடிக்காமல் மற்ற வேலை பார்த்து வந்த கமலுக்கு லோகேஷ் கனகராஜ் சொன்ன விக்ரம் படத்தின் கதை.

ரொம்ப பிடித்துப் போகவே அந்த படத்தை துணிந்து தயாரிக்கவும், நடிக்கவும் செய்தார் ஒருவழியாக படம் ஜூன் மூன்றாம் தேதி திரையரங்கில் வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்குகிறது.

அண்மை காலமாக டாப் ஹீரோக்கள் படங்கள் பெரிய வசூல் வேட்டை நடத்தாத நிலையில் விக்ரம் திரைப்படம் எதிர்பார்க்காத அளவிற்கு ருத்ர தாண்டவம் ஆடுகிறது.படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் வேட்டை நடத்தி அதற்கு முக்கிய காரணம் கதைக் களம் இதுவரை இல்லாத அளவிற்கு ஹாலிவுட் ரேஞ்சுக்கு..

சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் படமாக இருந்ததால் தற்போது அனைவரையும் கவர்ந்து இழுத்து ஓடிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது இது வரை கமலின் விக்ரம் திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளியதாக தகவல் வெளிவந்த நிலையில் இரண்டு வார முடிவில் மொத்தமாக கமலின் விக்ரம் திரைப்படம் இதுவரை சுமார் 340 கோடி வசூலை அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது.

மிக விரைவிலேயே பத்து கோடியை அள்ளிய 350 கோடியைத் தொட்டுவிடும் என கூறுகின்றனர். கமலின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படமாக விக்ரம் படம் அமைந்தது.  மேலும் ரசிகர்கள் பலரும் அண்மைக்காலமாக பாகுபலி கே, ஜி எஃப், RRR போன்ற படங்களை பேசி வந்த நிலையில் தற்போது அதை எல்லாம் மறந்துவிட்டு கமலின் விக்ரம் திரைப்படத்தை தற்போது தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றனர்.