கமலின் “விக்ரம் திரைப்படம்” தற்போதைய நிலவரப்படி முதல் நாளில் இவ்வளவு கோடி தான் வசூல் செய்யுமாம்.?

vikram movie
vikram movie

உலகநாயகன் கமலஹாசன் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சினிமா உலகில் அதை சீரும் சிறப்புமாக நடித்து அசத்துவார் அவரது நடிப்பை பார்க்கவே ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது சினிமா ஆரம்பத்தில் தொடர்ந்து வெற்றியை பெற்று ஓடிக்கொண்டிருந்த கமல்.

அண்மை காலமாக அரசியல் வியாபாரம் போன்றவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதால் கடந்த நான்கு வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார் ஆனால் அண்மையில் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் கதையை கூறவே அந்த கதை அவருக்கு ரொம்பப் பிடித்துப் போக உடனடியாக படமாக உருவாகியது படம் தற்போது எடுக்கப்பட்டு வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி பகத் பாசில் நரேன் சூர்யா என மிகப் பெரிய பட்டாளமே நடித்துள்ளது இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக இருப்பதால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது அதேசமயம் நீண்ட வருடங்கள் கழித்து கமல் திரைப்படம் வெளிவருவதால் படத்திற்கான வரவேற்பு வேற லெவலில் இருக்கிறது.

விக்ரம் திரைப்படம் உலக அளவில் மொத்தம் 5000 திரையரங்குகளில் வெளியாகிறது தமிழகத்தில் மட்டுமே ஆயிரம் திரையரங்குகள் என கூறப்படுகிறது இதனால் முதல் நாளில் மிகப்பெரிய ஒரு வசூலை அள்ள காத்துக்கொண்டிருக்கிறது கமலின் விக்ரம் முதல் நாளில் மட்டும் 15 அல்லது 20 கோடி அள்ளும் என கருதி உள்ளதாம்.

தமிழ் சினிமாவில் அதிக வசூலைப் பெற்ற திரைப்படமாக விஜய்யின் பீஸ்ட் இருப்பதாக கூறப்படுகிறது அதை முதல் நாளில் முறியடிக்குமா என்பது தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.