OTT தளத்தில் நல்ல வரவேற்பை பெறும் கமலின் “விக்ரம் படம்”- முதல் வாரத்திலேயே இப்படி ஒரு சாதனையா..

kamal-

கடந்த மாத தொடக்கத்தில் லோகேஷ் கனகராஜ் கமல் கூட்டணியில் உருவான விக்ரம் திரைப்படம் வெளியாகியது. இந்த படம் கமல் நடிப்பில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு உருவாகியதால் மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. படமும் வெளிவந்து மக்கள் எதிர்பார்த்தபடி அமைந்துள்ளதால் இந்த படத்தை மக்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர்.

மேலும் தற்போது தமிழ் சினிமாவில் அஜித் விஜய் போன்ற டாப் நடிகர்கள் இருந்து வருகின்ற நிலையில் கமலஹாசனின் படம் எல்லாம் இனி பெரிய அளவு ஓடாது என சிலர் நினைத்து வந்தனர் ஆனால் படம் வெளியாகி பல கோடி வசூலை பெற்றது. இதனால் அஜித் விஜய்யின் படங்கள் செய்த சாதனையை எல்லாம் அசால்டாக முறியடித்தது

410 கோடிக்கு மேல் விக்ரம் படம் வசுலை அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கிய காரணம் விக்ரம் படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா போன்ற பலரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தனர்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்த விக்ரம் படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் தனது அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று பிஸியாக நடித்து வருகின்றனர். கமலஹாசனும் தற்போது தேவர் மகன் 2 இந்தியன் 2 போன்ற படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் விக்ரம் படம் ஹாட்ஸ்டாரில் வெளியானது அங்கும் நல்ல வரவேற்பு பெற்று வருவதாக கூறப்படுகிறது. படம் வெளியான முதல் வாரத்திலேயே அதிக viewer ship, subscription, watch time போன்றவற்றை விக்ரம் படம் பெற்றுள்ளது.