தமிழ் சினிமாவை அண்மைக்காலமாக இளம் இயக்குனர்கள் தான் தூக்கி நிறுத்தி உள்ளனர் அவர்களில் ஒருவராக இடம் பிடித்து உள்ளவர் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இவர் இதுவரை மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை கொடுத்துள்ளார்.
இந்த அனைத்து படங்களும் வெற்றி படங்களாக இருந்தாலும் அதிகம் வசூல் ஈட்டிய திரைப்படமாக அமைந்துள்ளது கமலின் விக்ரம் திரைப்படம் தான். விக்ரம் படத்தில் கமல் நடித்ததால் கதையை பார்த்து பார்த்து சூப்பராக செதுக்கினார். அதற்கு ஏற்றார் போல நடிகர், நடிகைகளையும் சிறப்பாக நடிக்க வைத்தார்.
அந்த வகையில் கமலுடன் கைகோர்த்து பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா, நரேன், டினா, காயத்திரி என பலர் நடித்து ஆசத்தினார். படம் சிறப்பாக இருந்த காரணத்தினால் தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது அதன் காரணமாக வசூல் வேட்டையும் ஜோராக அள்ளி உள்ளது இதுவரை விக்ரம் படம் உலக அளவில் 400 கோடிக்கு மேல் அள்ளி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் மட்டுமே இதுவரை கமலின் விக்ரம் திரைப்படம் சுமார் 170 கோடி வசூல் செய்து கொள்ளலாம் அண்மை காலமாக எந்த ஒரு திரைப்படமும் இவ்வளவு வசூல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் விக்ரம் திரைப்படம் 5 வாரங்களை தொட்டு ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்பொழுது கூட சுமார் 150 திரையரங்குகளில் விக்ரம் படம் சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் விக்ரம் படத்தின் படக்குழுவு செம்ம சந்தோஷத்தில் இருக்கிறது. திரையரங்கில் நல்ல வரவேற்ப்பை பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக OTT தளத்திலும் மிகப்பெரிய ஒரு சாதனையை விக்ரம் படம் நிகழ்த்தும் என சொல்லப்படுகிறது.