இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த கமலின் 6 மெகா ஹிட் திரைப்படங்கள்..! ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்..!

kamal-02
kamal-02

தமிழ் சினிமாவில் உலக நாயகன் என போற்றப்படும் நடிகர் தான் கமல் இவர் பிளாக் அண்ட் ஒயிட் திரைப்படங்கள் முதல் டிஜிட்டல் திரைப்படங்கள் வரை அனைத்து வகையான திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் குழந்தை நட்சத்திரமாகவும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியாகி 175 நாட்களை தாண்டிய திரைப்படங்கள் பற்றிய விபரங்கள் இதோ.

சிகப்பு ரோஜா என்ற திரைப்படத்தை இயக்குனர் பாரதிராஜா அவர்கள் இயக்கியிருந்தார் இந்நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகர் கமல் இளம் பெண்களால் பாதிக்கப்பட்ட சைக்கோ கில்லர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படமானது கமலை காதல் இளவரசனாக ரசிகர்களை போற்ற செய்தது.

குரு திரைப்படத்தில் நடிகர் கமலஹாசன் ஸ்ரீதேவியுடன் இணைந்து நடித்திருப்பார் இத்திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் மாபெரும் ஹிட்டு கொடுத்தது. இன் நிலையில் கமலஹாசன் இந்த திரைப்படத்தில் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அதில் ஒன்று குரு மற்றொரு கதாபாத்திரம் அசோக் இத் திரைப்படமானது ஆயிரம் நாட்கள் திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது.

மூன்றாம் பிறை திரைப்படமானது பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும் இத்திரைப்படத்தில் நடிகர் கமலுக்கு ஜோடியாக ஸ்ரீதேவி அவர்கள்தான் நடித்திருப்பார். மாபெரும் ஹிட் கொடுத்த இந்த திரைப்படத்தின் மூலம் சிறந்த நடிகருக்கான விருதையும் நடிகர் கமல் தட்டிச் சென்றுள்ளார்.

அபூர்வ சகோதரர்கள் சங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் ஆனது நல்ல வரவேற்ப்பை பெற்று ஹிட் கிடைத்தது இத்திரைப்படத்தில் கௌதமி ஸ்ரீதேவி நாகேஷ் ஜனகராஜ் போன்ற பல்வேறு  பிரபலங்கள் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தில் நடிகர் கமல் இரண்டு வேடத்தில் நடித்திருப்பார் அதில் ஒன்று உயரமான கமல் மற்றொன்று குள்ளமான கமல் ஆகியவை ஆகும் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ஹிட் அடித்தது..

kamal-01
kamal-01

தேவர் மகன் திரைப்படம்மானது பரதன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும் இந்த திரைப்படத்தில் நடிகர் கமல் உடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்திருப்பார் இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படத்தின் மூலம் ஐந்து தேசிய திரைப்பட விருதை வென்றுள்ளார்.

இந்தியன் திரைப்படம் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும் இத்திரைப்படத்தில் கமலஹாசனுடன் நடிகை மனிஷா கொய்ராலா சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் என பல்வேறு நடிகர்கள் நடித்த இத்திரைப்படத்தில் கமல் இரட்டை வேடத்தில் நடித்து கெத்து காட்டி உள்ளார்.