சாதனை படைத்த கமலின் “விக்ரம் படம்” – 75 நாள் நிறைவு..! இதுவரை அள்ளிய கோடிகள் எவ்வளவு தெரியுமா.?

kamal
kamal

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அசத்தி வருகிறார். இவர் கடைசியாக உலக நாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் என்னும் படத்தை எடுத்தார். இந்த படம் முழுக்க முழுக்க வித்தியாசமாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்து போனது மேலும் இந்த படத்தின் கதைக்கு ஏற்றவாறு சிறந்த நடிகர்களை நடிக்க வைத்தது இந்த படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது என கூறப்படுகிறது

இந்த படத்தில் கமலுடன் கைகோர்த்து விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன், காயத்ரி, ஏஜென்ட் டினா மற்றும் பல முன்னணி நடிகர் நடிகர்கள் நடித்திருந்தனர் இந்த படத்தை கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்திருந்தது. படம் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வசூல் அள்ளியது.

இந்த படம் ஏற்கனவே சுமார் 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளியதாக கூறப்பட்ட நிலையில்  தற்பொழுது என்னவென்றால் விக்ரம் திரைப்படம் வெளிவந்து சுமார் 75 நாட்களை நிறைவு செய்துள்ளது இதனை நினைவுபடுத்தும் வகையில் உலகநாயகன் கமலஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் நிறுவனம் வெளியிட்டுள்ளது. விக்ரம் திரைப்படம் 75 நாட்களை நிறைவு செய்து விட்டது என பதிவிட்டார்.

மேலும் விக்ரம் திரைப்படம் இந்தியாவின் மாபெரும் சக்தி எனவும் குறிப்பிட்டுள்ளது தமிழகத்தில் இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் அள்ளியது. படம் வெளியான 17 நாட்களில் 250 கோடி வசூல் செய்தது ஜூன் மாதத்தில் மட்டுமே விக்ரம் திரைப்படம் 400 கோடியை கடந்து விட்டது.

இன்னும் ஒரு சில இடங்களில் விக்ரம் படம் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது இதனால் 75 நாட்களை கடந்து ஓடுகிறது விக்ரம் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது நமக்கு சரியாக தெரியவில்லை. ஆனால் கிட்டத்தட்ட 420 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கும் என சொல்லப்படுகிறது.